தமிழ்நாட்டில் 29,870 பேருக்கு கரோனா பாதிப்பு 6 மாவட்டங்களில் தொற்று அதிகரிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 22, 2022

தமிழ்நாட்டில் 29,870 பேருக்கு கரோனா பாதிப்பு 6 மாவட்டங்களில் தொற்று அதிகரிப்பு

சென்னை, ஜன.22 தமிழ்நாட்டில் நேற்று 29,870 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 6 மாவட்டங்களில் தொற்று அதி வேகமாக உயர்ந்துள்ளது. 

தமிழ்நாட்டில் சென்னை, கோவை, செங்கல்பட்டு உள்ளிட்ட 6 மாவட்டங்களில் நேற்று (21.1.2022) ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. இந்த நிலையில் நேற் றைய (கரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்ப தாவது:-

தமிழ்நாட்டில் நேற்று புதிதாக 1 ,47,054 பேருக்கு கரோனா பரிசோத னை செய்யப்பட்டது. இதில் 16,884 ஆண்கள், 12,986 பெண்கள் என மொத்தம் 29,870 பேருக்கு புதிதாக கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் அதிகபட்சமாக சென் னையில் 7 ஆயிரத்து 38 பேரும், கோவையில் 3,653 பேரும், செங்கல் பட்டில் 2 ஆயிரத்து 250 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறைந்த பட்சமாக சிவகங்கையில் 127 பேரும், பெரம்பலூரில் 128 பேரும் பாதிக் கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் நேற்று வெளிநாட்டில் இருந்து வந்த ஒருவருக்கும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 21 பேர் உள்பட 12 வயதுக்குட்பட்ட ஆயிரத்து 75 குழந்தைகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 4 ஆயிரத்து 247 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை 30,72,666 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 12 வயதுக்கு உட்பட்ட 1,15,371 குழந்தை களும், 60 வயதுக்கு மேற்பட்ட 4,44,726 முதியவர்களும் இடம்பெற் றுள்ளனர்.

தமிழ்நாட்டில் நேற்றைய நில வரப்படி 9,690 பேர் மருத்துவ மனைகளில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 4,555 பேர் ஆக்சிஜன் வசதி படுக்கை கொண்ட வார்டுகளிலும், 1095 பேர் தீவிர சிகிச்சை பிரிவிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

33 பேர் உயிரிழப்பு

கரோனாவுக்கு தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனையில் 12 பேரும், தனியார் மருத்துவமனையில் 21 பேரும் என 33 பேர் சிகிச்சை பலனின்றி  நேற்று உயிரிழந்துள்ளனர். அதில் அதிகபட்சமாக சென்னையில் 14 பேரும், திருவள்ளூர், திருச்சியில் தலா 4 பேரும், கோவையில் இரு வரும், செங்கல்பட்டு, திண்டுக்கல், காஞ்சிபுரம், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர், வேலூர், விழுப்புரத்தில் தலா ஒருவரும் என 13 மாவட்டங்களில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை மொத்தம் 37,145 பேர் கரோனா தொற்றால் உயிரிழந்து உள்ளனர்.

இத்தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 21,684 பேர் குணமடைந் துள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 8,164 பேரும், செங்கல் பட்டில் 2,011 பேரும், கோவையில் 1,383 பேரும் அடங்குவர். இது வரையில் 28,48,163 பேர் குண மடைந்து உள்ளனர். தமிழ்நாட்டில் கரோனா பாதித்த 1,87,358 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

No comments:

Post a Comment