திருப்புகலூரில். மனிதனை மனிதன் சுமக்கும் வேளாக்குறிச்சிஆதினத்தின் பட்டினப்பிரவேசத்தை கண்டித்து திராவிடர் கழகம் சார்பில் மறியல் போராட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 31, 2022

திருப்புகலூரில். மனிதனை மனிதன் சுமக்கும் வேளாக்குறிச்சிஆதினத்தின் பட்டினப்பிரவேசத்தை கண்டித்து திராவிடர் கழகம் சார்பில் மறியல் போராட்டம்

போராட்ட எதிரொலி : பட்டினப்பிரவேசம் ரத்து

கழகம் சார்பில்

நன்றி தெரிவிப்பு

திராவிடர் கழக கோரிக்கையை ஏற்று திருப்புகலூரில். மனிதனை மனிதன் சுமக்கும் பட்டினப்பிரவேசத்தை ரத்து செய்த திருப்புகலூர் ஆதினத்திற்கு கழக பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் தலைமையில் திராவிடர் கழகம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

திருப்புகலூர்,ஜன.31- நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம் திருப்புகலூரில் உள்ள வேளாக்குறிச்சி ஆதினம் அவர் களின் மணிவிழாவை முன்னிட்டு இந்த 21ஆம் நூற்றாண்டிலும் பட்டினப்பிரவேசம் என்ற மனிதனை மனிதன் தூக்கி சுமக்கும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிவுறுதலின்படி நாகை மாவட்ட தலைவர் வி.எஸ்.டி. .நெப்போ லியன், மாவட்ட செயலாளர் பூபேஸ்குப்தா ஆகியோர் கழகத் தோழர்களுடன் 29.01.2022 அன்று ஆதீனகர்த்தரை நேரில் சந்தித்து கடிதத்தின் மூலம் மனிதனை மனிதன் சுமக்கும் பட்டினப்பிரவேசத்தை நடத்தக்கூடாது மற்ற நிகழ்வுகளை நடத் திக் கொள்ளுங்கள் பட்டினப்பிரவேசத்தை ரத்து செய்ய வேண்டும். மனித உரிமை மீறல் நடைபெறக்கூடாது என அறிவுறுத் தினர்.

இதனை அவர்கள் ஏற்றுக்கொள்ளாத காரணத்தினால்  21 ஆம் நூற்றாண்டிலும் மனிதனை மனிதன் சுமப்பதா? ஆதினத் தின் பட்டினப்பிரவேசத்தை கண்டித்து திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களின் ஆணைக்கிணங்க  30 .01.2022 ஞாயிறு மாலை 3 மணியளவில் திராவிடர் கழகம் சார்பில் திருப்புகலூரில் மாபெரும் மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

அறிவிப்பினையேற்று நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, காரைக்கால், கும்பகோனம், தஞ்சாவூர், மன்னார்குடி கழக மாவட்டங்களை சேர்ந்த திராவிடர் கழக பொறுப்பாளர்கள், தோழர்கள் மற் றும் முற்போக்கு இயக்கங்களை சேர்ந்த தோழர்கள், பொதுமக்கள் 300க்கும் மேற் பட்டோர்  30.-01.-2022 ஞாயிறு மதியம் 2.30 மணியளவில் திருப்புகலூரில் பெருந் திரளாக திரண்டனர்.

இந்த மறியல் போராட்டத்திற்கு திரா விடர் கழக பொதுச்செயலாளர்  இரா.ஜெயக்குமார் தலைமையேற்று போராட் டத்தின் நோக்கம் குறித்து உரையாற்றினார்.

மாநில அமைப்பாளர் இரா.குணசேக ரன், திருவாரூர் மண்டல செயலாளர் சு.கிருஷ்ணமூர்த்தி, நாகை மாவட்டத் தலைவர் வி.எஸ்.டி.. நெப்போலியன்,  நாகை மாவட்ட செயலாளர் ஜெ.புபேஸ் குப்தா, திருவாரூர் மாவட்டத் தலைவர் வீ.மோகன், திருவாரூர் மாவட்டச் செய லாளர் வீர.கோவிந்தராசு, காரைக்கால் மண்டலத் தலைவர் குரு.கிருஷ்ணமூர்த்தி, காரைக்கால் மண்டலச் செயலாளர் பொன்.பன்னீர்செல்லம், தஞ்சை மாவட் டத் தலைவர் சி.அமர்சிங், தஞ்சை மாவட்ட செயலாளர் .அருணகிரி, மயி லாடுதுறை மாவட்டத் தலைவர் கடவாசல் குணசேகரன், மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் கி.தளபதிராஜ், கும்பகோணம் மாவட்டத் தலைவர் கு. நிம்மதி ஆகியோர் முன்னிலையேற்றனர். இப்போராட்டத் தில்  கழக தலைமை கழக பேச்சாளர் இராம.அன்பழகன்  கலந்துகொண்டு திராவிடர் கழகத்தின் இந்த போராட்டம் எதற்காக என்பதை விளக்கி, மனிதனை மனிதன் சுமக்கும் இந்த பட்டினப்பிரவேசம் நிகழ்வு என்பது மாபெரும் மனித உரிமை மீறல், இதுபோன்ற நிகழ்வுகள் எங்கு நடந்தாலும் தவறு, எங்கும் நடைபெற கூடாது என விளக்கவுரையாற்றினார்.

பட்டினப்பிரவேசம் ரத்து

இந்த செய்தியை அறிந்த ஆதினகர்த்தர் உடனடியாக தான் மேற்கொள்ளவிருந்த பட்டினப்பிரவேசம் எனும் மனிதனை மனிதன் சுமந்து பல்லக்கில் செல்லும் ஊர்வலத்தை ரத்து செய்துவிட்டார். அவரது மணிவிழா மட்டும் ஆதின மடத்திலேயே நடத்தினர்

உடனடியாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கழக தோழர்கள் மனிதனை மனிதன் சுமக்கும், மனித உரிமை மீறலான பட்டினப்பிரவேசத்தை ரத்து செய்த ஆதினகர்த்தருக்கும், ஒத்துழைப்பு வழங்கி கடமையாற்றிய காவல்துறையினருக்கும் நன்றி தெரிவித்து முழக்கமிட்டு கலைந்து சென்றனர்

ஒருநாள் இடைவெளியில் அறிவிக்கப் பட்ட போராட்டத்தில் பெருத்திரளாக கலந்துகொண்ட கழகப் பொறுப்பா ளர்கள், தோழர்கள், பொதுவுடமை இயக்க தோழர்கள், ஆதரவு தந்த பொது மக்கள், கடமையாற்றிய காவல்துறையினருக்கு நாகை மாவட்ட தலைவர் வி.எஸ்.டி.. நெப்போலியன் இறுதியாக நன்றி கூறினார்

இப்போராட்டத்தில் கலந்து கொண்ட தோழர்கள் நாகை மாவட்டம்

தொழிலாளரணி அமைப்பாளர் ராச.முருகையன், ஒன்றிய தலைவர் கு.சின்னத் துரை, ஒன்றிய செயலாளர் இரமேஷ், மண்டல இளைஞரணி தலைவர் சு.இராஜ்மோகன், நகர இளைஞரணி செயலாளர் வை.சுரேஷ், மாநில மாணவர் கழக து.செயலாளர் நாத்திக பொன்முடி, மாவட்ட இளைஞரணி தலைவர் கி.சுரேஷ், மாவட்ட இளைஞரணி செயலாளர் வெ.தீபன் சக்கரவர்த்தி, விஜயக்காந்த், மாவட்ட இணை செயலாளர் இராம லிங்கம், மாவட்ட மகளிரணி செயலாளர் பேபி, மாவட்ட மாணவரணி செயலாளர் குட்டிமணி, மாவட்ட மாணவர் கழக துணை செயலாளர் மு.இளமாறன், ஒன்றிய துணை செயலாளர் மாதவன், மாவட்ட மாணவர் கழக துணை செய லாளர் ஆதித்தியன், மாண்டல ஆசிரிய ரணி செய லாளர் இரா.முத்துகிருஷ்ணன், மாவட்ட ஆசிரியரணி தலைவர் இரா.தியாகசுந்தரம், முன்னாள் மாவட்ட செயலாளர் கு.சிவா னந்தம், முன்னாள் மண்டல மாணவர் கழக செயலாளர் இரா.சுரேஷ், ரவிச்சந்திரன், சு.சஞ்ஜீவிராஜன், வி.இளைய ராஜா, மகாலிங்கம், தினேஷ், காமராஜ், கோவி.பெரியார்முரசு, மாணவரணி மணி கண்டன், .அரவின், .இளமாறன், பெரியார் பிஞ்சு

செ.அறிவுச்செல்வன்.

தோழமை இயக்கத்தினர்

 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன் றிய செயலாளர் ஜி.எஸ்.ஸ்டாலின்பாபு, மாவட்டக் குழு உறுப்பினர்கள் எம்.ஜெய பால், லெனின், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் எம்.எம்.பாலு, பிரபாகரன், பெரியார், அம்பேத்கர் தோழமை இயக்க ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ், உறுப்பி னர்கள் இராஜசேகர், அமர்நாத், சிறீநாத், பிரபாகரன்.

தஞ்சாவூர் மாவட்டம்

மாவட்ட துணை செயலாளர் .சந்துரு, மாவட்ட கலை இலக்கியணி தலைவர் வெ.நாராயணசாமி, மண்டல மகளிரணி செயலாளர் .கலைச்செல்வி, மண்டல இளைஞரணி செயலாளர் நெல்லுப்பட்டு முனைவர் வே.இராஜவேல், மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந் தூரபாண்டியன், தஞ்சை மாநகர செயலா ளர் கரந்தை டேவிட், உரத்தநாடு சக்தி வேல், மாரியம்மன் கோவில் பெரியார் கண்ணன், தஞ்சை ஒன்றிய இளைஞரணி பிரகாஷ், மாநகர இளைஞரணி துணை தலைவர் .பெரியார்செல்வம், பெரியார் மணி.

கும்பகோணம் கழக மாவட்டம்

குடந்தை மாநகர செயலாளர் பி.இரமேஷ், குடந்தை மாநகர து.தலைவர் மா.சிவானந்தம், திருநாகேஷ்வரம் நகர செயலாளர் திராவிட பாலு, திருவிடை மருதூர் ஒன்றிய செயலாளர் குணசேகரன், திருவிடைமருதூர் ஒன்றிய அமைப்பாளர் .சிவக்குமார், திருப்பனந்தாழ் ஒன்றிய அமைப்பாளர் துகிலிதமிழ்மணி, பெரி யாரிய உணர்வாளர் வெங்கடேசன்.

திருவாரூர் மாவட்டம்

மாவட்ட துணை தலைவர் அருண் காந்தி, மாவட்ட துணை செயலாளர் மா. வீரையன், மாவட்ட .. செயலாளர் அசோக்ராஜ், நகர செயலாளர் இராம லிங்கம், ஒன்றிய தலைவர் இராஜேந்திரன், ஒன்றிய செயலாளர் சாம்பசிவம், ஒன்றிய அமைப்பாளர் கணகராஜ், ஒன்றிய .. தலைவர் கவுதமன், ஒன்றிய இளைஞரணி மனோஜ், திருத்துறைப்பூண்டி நகர செயலாளர் நாகராஜ், திருத்துறைப்பூண்டி செல்லப்பா, நன்னிலம் நகர செயலாளர் சஞ்சீவி, மாவட்ட மாணவர் கழக தலைவர் உமாநாத், ஒன்றிய .. தலைவர் கரிகாலன், மாவட்ட இளைஞரணி தலைவர் பிளாட்டோ, ஓவியர் சங்கர், பழனிச்சாமி, திலீபன், ஈஸ்வரன்.

மன்னார்குடி கழக மாவட்டம்

மண்டல பகுத்தறிவு ஆசிரியர் அணி அமைப்பாளர் சி ரமேஷ், மாவட்ட பகுத் தறிவு ஆசிரியரணி தலைவர் வீரமணி, ஒன்றிய செயலாளர் சக்திவேல், மாணவர் கழக புகழேந்தி, படிப்பக பொறுப்பாளர் ஜீவானந்தம்.

காரைக்கால் மண்டலம்

காரைக்கால் மண்டல இளைஞரணி தலைவர் மு.பி.பெரியார் கணபதி, காரைக் கால் மண்டல இளைஞரணி செயலாளர் .லூயிஸ் பியர், மண்டல இளைஞரணி அமைப்பாளர் .ஸ்டாலின்  காரைக்கால் மண்டல இளைஞரணி கா.ராம்குமார்.

மயிலாடுதுறை மாவட்டம்

 மாவட்ட அமைப்பாளர் ஞான.வள்ளுவன், மயிலாடுதுறை மாவட்ட துணைத்தலைவர் கட்பீஸ் மா.கிருட்டிண மூர்த்தி, மயிலாடுதுறை மாவட்ட துணைச் செயலாளர் அரங்க.நாகரத்தினம், மயி லாடுதுறை ஒன்றிய தலைவர் டி.வி. இளங்கோவன், ஆசிரியர் பூ.சி.காம ராஜ், என்.எஸ்.மாசேதுங் மற்றும் அனைத்து முற்போக்கு அமைப்புகளை சேர்ந்த பொறுப்பாளர்கள், தோழர்கள், பொது மக்கள் ஏராளமானோர் கலந்து கொண் டனர்.

No comments:

Post a Comment