இந்தியாவில் 2.34 லட்சம் பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 31, 2022

இந்தியாவில் 2.34 லட்சம் பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு

புதுடில்லி,ஜன.31- இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,34,281 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். செலுத்தப்பட்ட மொத்த கோவிட்-19 தடுப்பூசி எண் ணிக்கை 165.70 கோடியைக் கடந்தது.

ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்  வெளியிட்டுள்ள அறிவிப்பில்  தெரிவித்துள்ளதாவது: நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 62 லட்சத்துக்கும் அதிகமாக (62,22,682) தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. இத்துடன் நாட்டில் செலுத்தப் பட்ட மொத்த கோவிட் தடுப்பூசிகளின் எண்ணிக்கை,  165.04 கோடியைக் (1,65,70,60,692) கடந்தது. 181,35,047 அமர்வுகள் மூலம் இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 3,52,784 பேர் குணமடைந் துள்ளதால், இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,87,13,494 ஆக அதிகரித்துள்ளது.

தொடர்ந்து குணமடைந்தோர் விகிதம் தற்போது 94.21 சதவீதமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2,34,281 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாட்டில் கோவிட் பாதிப்பிற்கு சிகிச்சை பெறுப வர்களின் எண்ணிக்கை 18,84,937 ஆக உள்ளது; நாட்டில் கோவிட் சிகிச்சை பெறுபவர்களின் மொத்த விகிதம் தற்போது 4.59 சதவீதமாக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 16,15,993 கோவிட் பரி சோதனைகள் செய்யப்பட்டன. இதுவரை சுமார் 72.73 கோடி கோவிட் பரிசோதனைகள் (72,73,90,698) செய்யப் பட்டுள்ளன. வாராந்திரத் தொற்று 16.40 சதவீதமாக உள்ளது. தினசரித் தொற்று விகிதம் 14.50 சதவீதமாக பதிவாகியுள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment