இணைய தளங்களில் மோசடிகள் அதிகரிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 31, 2022

இணைய தளங்களில் மோசடிகள் அதிகரிப்பு

பொதுமக்களுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை

புதுடில்லி, ஜன.31 இணைய மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் பாதுகாப்பானடிஜிட்டல் பேங்கிங்நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

சமூக ஊடக நுட்பங்கள், தொலைப்பேசி அழைப்புகள் என பலவற்றின் வாயிலாக மக்களை ஏமாற்றும் போக்கு சமீப காலமாக அதிகரித்துள்ளது.

எனவே டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும்போது, அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு, பொதுமக்களை ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது.

மக்கள் போலியான தொலைப்பேசி அழைப்புகள், தெரியாத லிங்குகள், தவறான அறிவிப்பு செய்திகள், அங்கீகரிக்கப்படாத கியு.ஆர்., குறியீடுகள் போன்றவை குறித்து மிகவும் விழிப்புடன் இருக்குமாறும், ரிசர்வ் வங்கி பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

ஹேக்கர்கள், வங்கிக் கணக்குகள் சம்பந்தமான அடையாள எண், பாஸ்வேர்டு, டெபிட், கிரெடிட் கார்டுகள் குறித்த தகவல்கள் போன்றவற்றை அறிந்து கொள்வதற்காக, பல்வேறு விதமாக மாற்றி அமைத்து பொதுமக்களை ஏமாற்ற முயற்சி செய்து வருகின்றனர்.

எனவே, டிஜிட்டல் பேங்கிங் வாயிலாக பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும்போது, இழப்பை தவிர்க்க, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ரிசர்வ் வங்கி கேட்டுக்கொண்டுள்ளது.

No comments:

Post a Comment