நுரையீரலுக்கு வலிமை தரும் கறுப்பு திராட்சை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 24, 2022

நுரையீரலுக்கு வலிமை தரும் கறுப்பு திராட்சை!

'வைட்டமின் - சி' நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்க சிறந்த வழி. ஆனால் தினமும் சாப்பிட்டால், ஒரு சிலருக்கு சளியை உண்டு பண்ணும்; அவர்கள் இதை தவிர்க்க வேண்டும்.

தொற்று உள்ள காலம், வைட்டமின் - சி தேவை என்பதற்காக, நமக்கு ஒவ்வாத பொருளை சாப்பிடக் கூடாது; உடம்பு ஏற்றுக் கொள்ளாது. அதே போன்று கமலா ஆரஞ்சு, பலாப் பழம் இரண்டும் சளியை அதிகரிக்கக் கூடியது; இவற்றை தவிர்த்து விடலாம்.

கறுப்பு திராட்சை நுரையீரலை பலப்படுத்தும்; சுத்திகரிக்கக் கூடிய தன்மையும் உடையது; அன்னாசி பழம் சாப்பிடலாம். பழம் மட்டுமே ஒரு வேளை உணவாக சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. காலை 11:00 மணி, மாலை 7:00 மணிக்கு பழம் சாப்பிடலாம். உணவு சாப்பிட்ட ஒரு மணி நேரம் கழித்து பழங்கள் சாப்பிடலாம். காலையில் எழுந்ததும் வெந்நீரில் வாய் கொப்பளிப்பது, வெளியில் செல்ல வேண்டிய அவசியம் இருந்தால், கால் டீ ஸ்பூன் நெய், அரை டீ ஸ்பூன் மஞ்சள் தூள் கலந்து சாப்பிட்டு விட்டு செல்லலாம்; தொற்றை தடுக்கும் ஆற்றல் இதற்கு உள்ளது.

No comments:

Post a Comment