ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் போட்டித் தேர்வுகள் : கால அட்டவணை -அமைச்சர் வெளியீடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 24, 2022

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் போட்டித் தேர்வுகள் : கால அட்டவணை -அமைச்சர் வெளியீடு

சென்னை, ஜன.24 பள்ளிக் கல்வித்துறை மற்றும் உயர் கல்வித் துறைகளில் நடப்பு ஆண்டில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 9 ஆயிரத்து 494 ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அட் டவணை வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன் ஆசிரியர் தகுதித் தேர்வு ஏப்ரல் 2ஆவது வாரத்தில் நடத்தப்படும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. பள்ளிக் கல்வித்துறையில் ஏற்படும் இடைநிலை, பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான காலிப் பணியிடங்களையும், உயர் கல்வித்துறையில் பாலிடெக்னிக் கல்லூரிகள், பொறியியல் கல் லூரிகள் உள்ளிட்டவற்றில் ஏற்ப டும் காலிப் பணியிடங்களையும், நிரப்புவதற்கான போட்டித் தேர் வுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி, தகுதி பெற்றோர் பட்டி யல்களை  தயார் செய்து மேற்கண்ட துறைகளுக்கு கொடுக்கும்.

அந்த பட்டியலில் உள்ள தகுதியன நபர்களுக்கு மேற்கண்ட இரண்டு துறைகளும் பணி நிய மனங்களை வழங்கும். இதன்படி, 2022ஆம் ஆண்டுக்கான போட் டித் தேர்வுகளின் கால அட்ட வணையை ஆசிரியர் தேர்வு வாரி யம் தயாரித்துள்ளது. அந்த அட் டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். அதில் முதுநிலை பட்டதாரி ஆசி ரியர்களுக்கான பணியிடங்கள் 2407 உள்ளன. அவற்றை நிரப் புவதற்கான போட்டித் தேர்வு பிப்ரவரி 2 அல்லது 3ஆவது வாரத்தில் நடக்கும். ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்துவது தொடர்பான அறிவிப்பு பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டு ஏப்ரல் மாதம் 2ஆவது வாரத்தில் தகுதித் தேர்வு நடத்தப்படும்.

தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் உள்ள 3902 இடை நிலை ஆசிரியர் பணியிடங்கள், 1087 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் என மொத்தம் 4989 காலிப் பணியிடங்களை நிரப்புவ தற்கான அறிவிப்பு மே மாதம் வெளியிடப்பட்டு ,ஜூன் மாதம் 2ஆவது வாரத்தில் தகுதித் தேர்வு நடத்தப்படும். மேலும், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்துக்கு தேவை யான 167 விரிவுரையாளர் தேர்வுக் கான அறிவிப்பு மே மாதம் வெளியிடப்படும். அதற்கான போட்டித் தேர்வு ஜூன் மாதம்  நடக்கும்.

அரசு கலை அறிவியல் கல் லூரிகளில் காலியாக உள்ள 1334 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ஜூலை மாதம் வெளி யாகும். ஆகஸ்ட் மாதம் முதற்கட்ட சான்று சரிபார்ப்பு  நடக்கும். அரசு தொழில்  கல்லூரிகளில் காலியாக உள்ள 493 உதவி விரிவுரையாளர் பணிக்கான அறிவிப்பு ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படும்.

நவம்பர் 2ஆவது வாரம் தேர்வு நடக்கும். பொறியியல் கல்லூரி களில் காலி யாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் 104 பூர்த்தி செய் வதற்கான அறிவிப்பு செப்டம்பர் மாதம் வெளியிடப் படும்.

போட்டித் தேர்வு டிசம்பர் மாதம் 2ஆவது வாரத்தில் நடக்கும். இவ்வாறு ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment