அரசு ஊழியர்கள் ஓய்வு வயதை 62 ஆக உயர்த்த ஆந்திர அமைச்சரவை முடிவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 24, 2022

அரசு ஊழியர்கள் ஓய்வு வயதை 62 ஆக உயர்த்த ஆந்திர அமைச்சரவை முடிவு

அமராவதி,ஜன.24- ஆந்திர மாநில அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 62 ஆக உயர்த்த முதலமைச்சர் ஜெகன் மோகன் தலைமையில் நடந்த அமைச் சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

ஆந்திர மாநில அமைச்சரவைக் கூட்டம், முதலமைச்சர் ஜெகன்மோகன் தலைமையில் அமராவதியில்   நடந்தது. சுமார் 2 மணி நேரம் நீடித்த இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக் கப்பட்டன. இதுகுறித்து செய்தியாளர் களிடம் தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறை அமைச்சர் பி.வெங்கட்ராமய்யா கூறியதாவது:

கரோனா வைரஸ் தொற்று மேலும் பரவாமல் இருக்க கூடுதல் நடவடிக்கை களை எடுக்க அமைச்சரவை தீர்மானித் துள்ளது. கரோனா சிகிச்சைக்காக மருத் துவமனைகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது, தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்துவது, பூஸ்டர் டோஸான 3-ஆவது தவணை தடுப்பூசி போடுவதை விரைவுபடுத்துவது, இரவு நேர ஊர டங்கைநீட்டிப்பது உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டது. குறிப்பாக, அரசு ஊழியர்களின் ஓய்வு வயது உச்சவரம்பை 60-இல் இருந்து 62-ஆக உயர்த்த அமைச் சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட் டுள்ளது. தற்போதைய புதிய பிஆர்சி-யின் படியே ஊதியம் வழங்கப்படும்.

மாநிலத்தில் மேலும் 16 மருத்துவக் கல்லூரிகள் கட்ட ரூ.7,880 கோடி நிதி ஒதுக்கவும் அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டது. ஏற்கெனவே உள்ள 11 மருத்துவக் கல்லூரிகளுக்கு கூடுதலாக ரூ.3,820 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். ஆந்திராவில் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த, 45 முதல் 60 வயது வரை உள்ள பெண்களுக்கு நிதி உதவி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

கரோனா வைரஸால் உயிரிழக்கும் அரசு ஊழியரின் வாரிசுகளுக்கு அரசு வேலை வழங்கப்படும். இறகு பந்து விளையாட்டு வீரர் கடாம்பி காந்த் தனது அகாடமியை தொடங்க திருப்பதியில் 5 ஏக்கர் நிலம் வழங்க தீர்மானிக்கப்பட் டுள்ளது. திருமலை - திருப்பதி தேவஸ் தானத்தில் சிறப்பு அழைப்பாளர்களை நியமனம் செய்வதற்கான சட்டத் திருத்தம் செய்வதற்கும் அமைச்சரவையில் அனுமதி பெறப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் பி.வெங்கட் ராமய்யா தெரிவித்தார்.

No comments:

Post a Comment