இந்தியாவில் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை 5 கோடியே 30 லட்சம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 22, 2022

இந்தியாவில் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை 5 கோடியே 30 லட்சம்!

புதுடில்லி, ஜன. 22 - 2021 டிசம்பர் நிலவரப்படி, இந்தியாவில் வேலை கிடைக்காதவர்களின் எண்ணிக் கை 5 கோடியே 30 லட்சம் என்று, இந்திய பொருளாதார கண் காணிப்பு மய்யம் (CMIE) புதிய தகவல்களை வெளியிட்டுள்ளது. இவர்களில் பெண்களின் எண் ணிக்கை மட்டும் 80 லட்சம் என்று சிஎம்அய்இ கூறியுள்ளது. இது தொடர்பாக சிஎம்அய்இ மேலும் குறிப்பிட்டிருப்பதாவது:

இந்தியாவில் வேலை கிடைக் காமல் இருப்பவர்கள் 5 கோடியே 30 லட்சம் பேர்  ஆவார். இவர்களில் 3 கோடியே 50 லட்சம் பேர் இப்போதும் தீவிரமாக வேலை தேடுபவர்களாக இருக்கிறார்கள்.  அதேநேரம் 1 கோடியே 70 லட்சம் பேர்  வேலை செய்வதற்கான திறன் இருந்தும், வேலையை தீவிரமாக தேடுபவர்களாக இல்லை. 2021 டிசம்பர் கணக்குப்படி, தீவிரமாக வேலை தேடும் 3 கோடியே 50 லட்சம் வேலையற்றவர்களில் 23 சதவிகிதம் அல்லது 80 லட்சம் பேர் பெண்களாக உள்ள னர். வேலை பார்ப்பதற்கான திறன் இருந்தும் தீவிரமாக வேலைதேடாத 1  கோடியே 70 லட்சம் பேர்களிலும் பெண் களின் எண்ணிக்கை 9 லட்சமாக உள்ளது. 

தீவிரமாக வேலை தேடுவோர், வேலை தேடாதோர், ஆண்கள், பெண்கள் என யாராக இருந்தாலும் ஒட்டுமொத்தமாக வேலையின்மையில் சிக்கித் தவிக்கும் 7.9 சதவிகிதம் பேருக்கும், அதாவது,  5 கோடியே 30 லட்சம் பேருக்கும் இந்திய ஆட்சியாளர்கள் உடனடி யாக வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். இதுதான் ஆட்சியா ளர்கள் எதிர்கொள்ளும் முக்கிய மான சவாலாகும் என்று சிஎம்அய்இ குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment