மன்னிப்பா? நாங்கள் ஒன்றும் சாவர்க்கர் அல்ல - ராகுல்காந்தி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 3, 2021

மன்னிப்பா? நாங்கள் ஒன்றும் சாவர்க்கர் அல்ல - ராகுல்காந்தி

 புதுடில்லி. டிச. 3- மக்கள் பிரச்சினையை நாடாளுமன்றத்தில் பேசியதற்கு மன்னிப்பா? நாங்கள் ஒன்றும் சாவர்க்கர் இல்லை என 12 உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில், காங்கிரஸ் தலைவர்  ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய  நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி  "இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள 12 உறுப்பினர்கள் மன்னிப்பு கோரினால், அவர்கள் மீதான தடை குறித்து பரிசீலனை செய்யப்படும்" என்றார்

இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தின. காங்கிரஸ் கட்சி, எஞ்சிய தொடரை புறக்கணிப்பதாக அறிவித்து உள்ளன.

இதுகுறித்து சுட்டுரையில் பதிவிட்டுள்ள ராகுல்காந்தி, "எதுக்கு மன்னிப்பு? மக்கள் பிரச்சினையை நாடாளுமன்றத் தில் பேசியதற்கு மன்னிப்பா? அதற்கு ஒருபோதும் இட மில்லை நாங்கள் சாவர்க்கர் அல்ல" என்று  இந்தியில் டிவிட் பதிவிட்டுள்ளார்.

ஏத்தர் மின்சார வாகனங்களின்

உற்பத்தி திறன் விரிவாக்கம்

சென்னை, டிச. 3- இந்தியாவின் முன்னணி மின்சார ஸ்கூட்டர் பிராண்டான ஏத்தர் எனர்ஜி, அதன் மின்சார ஸ்கூட்டர்களான 450ஙீ மற்றும் 450 பிளஸ் ஆகியவற்றின் வளர்ந்து வரும் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக ஓசூரில் அதன் இரண்டாவது உற்பத்தி நிலையத்தை அமைத்துள்ளது.

நிறுவனம் ஆண்டுக்கு 400,000 யூனிட்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது, இது அதன் தற்போதைய திறன் 120,000 யூனிட்களில் இருந்து ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஆகும். ஏத்தர் எனர்ஜி தனது முதல் உற்பத்தி ஆலையை இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஓசூரில் அமைத்தது. அக்டோபரில் ஏத்தர் எனர்ஜி அதன் சிறந்த மாதாந்திர விற்பனை எண்களைப் பதிவு செய்தது, கடந்த ஆண்டைக் காட்டிலும் 12 மடங்கு வளர்ச்சியைப் பதிவு செய்தது மற்றும் $100 மில்லியன் வருவாய் விகிதத்தை எட்டியுள்ளது.

இதுகுறித்து இந்நிறுவனத்தன் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி தருண் மேத்தா கூறியிருப்ப தாவது: “நாடு முழுவதும் மின்சார வாகனங்களின் தேவை அதிகரித்து வருகிறது. மேலும் வாடிக்கையாளர்கள் மின்சார ஸ்கூட்டர்களை எதிர்பார்த்து வருகிறார்கள். எங்களின்  450 சீரிஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களான 450ஙீ மற்றும் 450 பிளஸ் நாட்டிலேயே சிறந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டராக இருப்பதால், இந்த ஸ்கூட்டர்களுக்கு அதிக தேவை உள்ளது. எங்கள் அனுபவ மய்யங்கள் வேகமாக வளர்ந்து வருகின்றன. மேலும் வரும் காலாண்டுகளில் எங்கள் சில்லறை வர்த்தகம் ஆறு மடங்கு வளர்ச்சி அடையும். எனவே, எங்கள் தற் போதைய உற்பத்தி அலையை திறந்து பத்து மாதங்களுக்குள், நாங்கள் முழு திறனுடன் செயல்படுவதைக் காண்கிறோம்.இரண்டாவது ஆலையை 2022ஆம் ஆண்டுக்கு இயங்க தயாராக இருக்கும். இந்ததிறன் விரிவாக்கத்தின் மூலம், அடுத்த ஆண்டுக்குள் நாட்டின் மிகப் பெரிய மின்சார வாகன உற்பத்தியாளராக ஆவதற்கு ஏத்தர் தயாராகி வருகிறது". இவ்வாறு அவர் கூறினார்.

மாநகராட்சி நிலைக் குழுவில்

பெண்களுக்கு 50 சதவீதம்

சென்னை, டிச.3  -  மாநகராட்சி நிலைக் குழுக்களில், பெண் கவுன்சிலர்களுக்கு, 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்என, தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.மாநக ராட்சிகளில், கணக்கு, கல்வி, பொது சுகாதாரம், நிதி, நகர மைப்பு, பணிகள் நிலைக்குழு என, ஆறு நிலைக் குழுக்கள் அமைக்கப்படும். புதிதாக துவக்கப்பட்டுள்ள, கடலூர், காஞ்சிபுரம், சிவகாசி, கரூர், தாம்பரம் மாநகராட்சிகளிலும், ஆறு நிலைக் குழுக்களை உருவாக்க அரசாணை வெளியிடப் பட்டுள்ளது.

உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும். அதேபோல, மாநகராட்சி நிலைக் குழுக்களிலும் பெண் கவுன்சிலர்களுக்கு, 50 சதவீ தம் இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டு, விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதன் விவரம், தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment