தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் பணியிடங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 17, 2021

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் பணியிடங்கள்

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காலியிடம் : துணை மேலாளர் (பைனான்ஸ் & அக்கவுண்ட்ஸ்) பிரிவில் 17 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி : பி.காம்., அல்லது சி.., அல்லது எம்.பி.., (நிதி) முடித்திருக்க வேண்டும். மேலும் பைனான்ஸ் அக்கவுண்டிங் அல்லது பட்ஜெட்டிங் அல்லது இன்டர்னல் ஆடிட் அல்லது பன்ட் மேனேஜ்மென்டில் நான்காண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 35 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை : இணைய வழி எழுத்துத்தேர்வு.

தேர்வு மய்யம் : தமிழ்நாட்டில் சென்னை மட்டும்.

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ.500. .டபிள்யு. எஸ்., பிரிவினருக்கு ரூ. 300. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசி நாள் : 29.11.2021

No comments:

Post a Comment