இனி வீட்டிலிருந்து வேலையில்லை- அலுவலகம் வர தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆணை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 17, 2021

இனி வீட்டிலிருந்து வேலையில்லை- அலுவலகம் வர தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆணை

பெங்களூரு, நவ.17 இந்தியாவின் பல முன்னணி அய்.டி. நிறுவனங் களும் தங்களது அலுவலகங்களை திறக்க தொடங்கியுள்ளன. நாட்டின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டிசிஎஸ் நிறுவனம் ஊழியர்களை அலுவலகத்திற்கு வந்து பணிபுரிய கூறியுள்ளது.

நாட்டில் கரோனாவின் தாக்கம் குறையத் தொடங்கியுள்ள நிலையில், இந்த நடவடிக்கையை எடுத்துள்ள தாக தெரிவித்துள்ளது.ஏற்கெனவே நாட்டில் கரோனாவின் தாக்கம் குறையத் தொடங்கியுள்ள நிலையில் பள்ளி, கல்லூரிகள் கூட தொடங்கப் பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து கடந்த சில காலாண்டு களாகவே, ஊழியர்கள் தொடர்ந்து வீட்டில் இருந்து பணியாற்றி வரும் நிலையில், தற்போது அவர்களை அலுவலகத் திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

ஆக இதன் மூலம் தொடர்ச்சியாக 19 மாதங்களாக வீட்டில் இருந்து பணிபுரிந்து வந்த ஊழியர்கள், அலுவலகம் திரும்ப தொடங்கி யுள்ளனர். எனினும் தற்போதைக்கு நெகிழ்வான முறை யில் அனைத்து ஊழியர்களும் அலுவலகத்திற்கு திரும்புவர். ஆக அந்த குழுவின் தலைவர்கள், தேவையை பொறுத்து இது அமையும் என்று டிசிஎஸ் நிறுவனம் கூறியுள்ளது.

மேலும் டிசிஎஸ் இது குறித்தான அறிக்கையில் நாங்கள் 25/25 மாதிரியில் உறுதியாக இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளது. இந்த 25/25 மாடல் என்பது 25  விழுக்காடு ஊழியர்கள் மூத்த ஊழியர்கள் அலுவலகம் வந்தால் போதும். அதுவும் 25 விழுக்காடு நேரம் மட்டும் அலுவலகத்தில் இருந்தால் போதும் என்று கூறப்பட்டது.இந்த 25/25 திட்டத்தினை 2025ஆம் ஆண்டுக்குள் முழுக்க செய்ய திட்டமிட்டுள்ளது. இது ஊழியர் களுக்கு ஒரு நெகிழ்வு தன்மையை அளிப்பதுடன், ஊழியர்கள் அலுவ லகத்திற்கும் வருவார்கள். வீட்டில் இருந்தும் பணிபுரி வார்கள். இது ஊழியர்களுக்கு பயனுள்ளதாக இருப்பதோடு, நிறுவனத்தின் லாபத் தினையும் அதிகரிக்க வழிவகுக்கும்.கடந்த வாரத்தில் மொத்த ஊழியர் களில் 5 விழுக்காடு பேர் மட்டுமே அலுவலகத்தில்பணிபுரிந்து வருகின்றனர். மொத்த ஊழியர்கள் சுமார் 5,28,748 ஊழியர்கள் உள்ளனர். கடந்த அக்டோபரில் டிசிஎஸ் நிறுவனம் அதன் ஊழியர்களில் 70% பேர் முழுமை யாக தடுப்பூசி போடப்பட்டி ருப்பதால், 95% பேர் கோவிட் தடுப் பூசியின் முதல் கட்ட தடுப்பூசியை யாவது போட்டுக் கொண்டுள்ளனர். ஆக அவர்கள் விரைவில் அலுவலகம் திரும்புவார்கள் என்று கூறியது.

இது குறித்து நாஸ்காம் அறிக் கையின் படி வாரத்தில் அய்ந்து நாட்கள் பணிக்கு பதிலாக, இனி வாரத்தில் மூன்று நாட்கள் அலு வலகம் என்பதைக் கொண்டு வருவதில் நிறுவனங்கள் ஆர்வமாக உள்ளன. முதல் கட்டமாக 25 வயதிகுட்பட்பட்டவர்கள் நவம்ப ருக்குள் திரும்புவார்கள்.

அதற்கு மேற்பட்டவர்கள் படிப்படியாக திரும்புவார்கள் என கூறியிருந்தது.கடந்த ஆண்டில் கரோனாவினை கட்டுப்படுத்தும் விதமாக, நாடு தழுவிய முழு அடைப்பு அமல்படுத்தப்பட்ட நிலையில், பல முன்னணி அய்.டி. நிறுவனங்களும் தங்களது ஊழியர் களை வீட்டில் இருந்து பணியாற்ற கூறி வந்தன. ஒரு கட்டத்தில் பல பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவ னங்கள் இதனை கட்டாயமாக்கலாம் என்று கூட கூறி வந்தன.அதன் பின்னர் பகுதி நாட்கள் அலுவலகத் திலும், சில நாட்கள் வீட்டில் இருந்தும் பணி புரியும் பிளெக்ஸி முறையை நிரந்தர மாக செய்யலாம் என கூறி வந்தன. இந்த நிலையில் இந்தியாவினை பொறுத்தவரையில் கரோனாவின் தாக்கம் குறையத் தொடங்கியுள்ள நிலையில் தற் போது அய்டி நிறுவனங்கள் ஊழி யர்களைஅலுவலகத்திற்கு அழைக்கத் தொடங்கியுள்ளன.நாட்டின் மற்றொரு முன்னணி நிறுவனமான இன்ஃபோசிஸ் ஜூன் காலாண்டு முடிவில் 2.67 லட்சம் ஊழியர்களை கொண்டுள்ளன. இது கடந்த மார்ச் காலாண்டில் 2.59 லட்சம் ஊழியர்களை கொண்டிருந் தது.

இன்ஃபோசிஸ் நிறுவனமும் காலாண்டு அறிக்கையினை வெளியிடும்போது, அதன் ஊழியர்களில் பெரும்பாலானோர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ள நிலையில் வேறு மாதிரியை பின்பற்றப் போ வதாக தெரிவித்து இருந்தது.

விப்ரோ நிறுவனம் அதன் மூத்த ஊழியர்களை செப்டம்பர் மாதத் தில் வர கூறியிருந்தது.

 அதன் ஊழியர்களில் 85% பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ள தாகவும், 50% பேர் முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ள தாகவும் அந்த நிறுவனத்தின் தலைவர் ரிசாத் பிரேம்ஜி கூறியிருந்தார்

எச் சி எல்லின் 90 விழுக்காடு ஊழி யர்கள் மற்றும் அவர்களின் குடும்பத் தினர் முழு தடுப்பூசியையும் போட்டுக் கொண்டுள்ளனர். அவர் களை அலுவலகம் வரக் கூறியிருந் தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment