மத்தியப் பிரதேசத்தில் பெயர் மாற்ற ஊழியர்களுக்கு அரசியலைத் துவங்கிய பா.ஜ.க. காங்கிரஸ் குற்றச்சாட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 17, 2021

மத்தியப் பிரதேசத்தில் பெயர் மாற்ற ஊழியர்களுக்கு அரசியலைத் துவங்கிய பா.ஜ.க. காங்கிரஸ் குற்றச்சாட்டு

 போபால் நவ.17 போபாலின் ஹபீப்கஞ்ச் ரயில் நிலையத்தின் பெயரை ராணி கமலாபாடி என்று பெயர் மாற்றிய பாஜக வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடுகிறது என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

 மோடி போபால் ஹபீப் கஞ்ச் ரயில் நிலையத்தை தரம் உயர்த்தப்பட்ட ரயில் நிலையமாக மாற்றி அதன் பெயரை ராணி கமலாபாடி ரயில் நிலையம் என்று புதிய பெயர் சூட்டினார்.

 முகலாய வம்சத்தில் வந்த குறுநில மன்னர்களது குடும்பங்களுக்கு ஆங்கிலேயர் காலத்தில்   100 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. ஹபிபுல்லாவுக்கு வழங்கப்பட்ட நிலமான ஷாபுராவில் ஒரு கிராமம் உருவாகிற்று. 1874-1976இல் இப்பகுதி வழியாக ரயில் பாதை அமைக்கப்பட்டபோது, ஒரு சிறிய ரயில் நிலையம் வந்தது. 1969இல் ஹபிபுல்லாவின் குடும்பத்தினர் ரயில் நிலையம் அமைக்க இடமும், 15 லட்சம் ரூபாயை ரயில் நிலையத்தை மேம்படுத்தவும் கொடுத்தனர். இதனை அடுத்து ஹபிபுல்லாவிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அவரது பெயரால் ஹபீப்கஞ்ச் என்று பெயர் சூட்டப்பட்டது.

2018 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பழங்குடியினர் மற்றும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த வாக்காளர்கள் மத்தியில் இழந்த சில தளங்களை மீண்டும் பெற பாஜக  முயற்சி மேற்கொண்டது.

இருப்பினும் பாஜக சட்டமன்றத் தேர்தலில் தோல்வியைச் சந்தித்தது, பின்னர் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மீண்டும் பாஜக ஆட்சியைக் கைப்பற்றியது. இதனை அடுத்து மத்தியப்பிரதேசத்தில் வாழ்கின்ற பழங்குடியினரின் வாக்குகளைப் பெற  சிந்த்வாராவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில்  பழங்குடியின தலைவர்களான ஷங்கர் ஷா மற்றும் ரகுநாத் ஷா ஆகியோரின் பெயரிட்டது. மேலும் அவர்களுக்கு ஒரு நினைவகத்தையும் கட்டிவருகின்றனர். மேலும் காண்ட்வா மாவட்டத்தில் பழங்குடியினத் தலைவர்களில் ஒருவரான தந்தியா மாமா என்றவரின் நினைவிடமும், பர்வானி மாவட்டத்தில் பீமா நாயக்கின் நினைவிடமும் நிறுவப்பட்டுள்ளது.  அவசரகதியில் ரயில் நிலையத்தின் பெயர் மாற்றம் குறித்து மேனாள் மத்தியப் பிரதேச காங்கிரஸ் முதலமைச்சரும்,  எதிர்க்கட்சித் தலைவருமான கமல்நாத்  வெளியிட்டுள்ள அறிக்கையில், கோண்ட் ராணியின் நினைவாக ரயில் நிலையத்திற்கு பெயரை சூட்டியுள்ளீர்கள். இடிந்து கிடக்கும்அந்த ராணியின் மகாலை எப்போது புதுப்பிக்கப் போகிறீர்கள்?  பழங்குடியினரின் வாக்குகளைப் பெற அவசரகதியில் பழங்குடியின தலைவர்களின் பெயரை வைத்து பெயர் மாற்ற அரசியலை மத்தியப் பிரதேசத்திலும் வேகமாகச் செய்துவருகிறீர்கள் என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment