பிளஸ் 2வுக்கு பிறகு ஊதியத்துடன் வேலை - படிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 17, 2021

பிளஸ் 2வுக்கு பிறகு ஊதியத்துடன் வேலை - படிப்பு

தகவல் தொழில்நுட்பத் தொழில் நிறுவனங்களில் அளிக்கப்படும் வேலைகளின் தரம், மேற்கத்தியப் பணிச்சூழல், நல்ல சம்பளம் உள்ளிட்ட காரணங்களினால், கணினி தொழில்நுட்பக் கல்வியில் மாணவர்கள் ஆர்வத்துடன் சேர்கின்றனர்.

அய்டி துறையை எடுத்துக்கொண்டால், அதில் முறையாக கணினித்துறையில் பட்டப்படிப்பு முடித்தவர்களைவிட, பிற படிப்புகள் முடித்து வேலைக்குச் சேர்ந்தவர்களே அதிகமாக உள்ளனர். 15 - 16 ஆண்டுகள் சம்பந்தம் இல்லாமல் வேறு ஏதோ படித்தவர்களால், எப்படி அந்த துறையில் நுழைய முடிகிறது, எப்படி அங்கே நிலைத்து நின்று சாதிக்க முடிகிறது? அந்த நிறுவனங்களில் அளிக்கப்படும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளே அந்தக் கேள்விகளுக்கான பதில்கள். பணியின் தேவைக்கும், படிப்புக்கும் இடையிலிருக்கும் திறன் போதாமையை அந்த பயிற்சிகள் நிரப்புகின்றன. இந்தப் பயிற்சிகளின் நீட்சியே, தற்போது ஹெச்.சி.எல் நிறுவனம் செயல்படுத்திவரும் 2 முடித்த மாணவர்களுக்கான டெக்பீ (TechBee) படிப்புத் திட்டம்.

டெக்பீ பயிற்சி திட்டம்

டெக்பீ திட்டத்தில் இணையும் ஒவ்வொரு மாணவருக்கும் வழங்கப்படும் ஓராண்டு பயிற்சி அவர்களை மென்பொருள் பொறியாளராக மாற்றுகிறது. தொழில்நுட்ப ரீதியாகவும் தொழில் ரீதியாகவும் தயார்ப் படுத்தப்படும் இந்த மாணவர்கள், எச்.சி.எல் நிறுவனத்திலிருக்கும் நுழைவு நிலை தகவல் தொழில்நுட்ப வேலைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதனால்,  பிளஸ் 2க்கு பின்னர் வெறும் அய்ந்து ஆண்டுகளில், உலகளாவிய பெரும் நிறுவனத்தில் தகவல் தொழில்நுட்ப அனுபவமும், பிட்ஸ் பிலானி போன்ற மதிப்புமிக்க கல்வி நிறுவனத்தில் பட்டமும் மாணவர்களுக்குக் கிடைக்கிறது.

பிளஸ் 2வுக்குப் பின்னர் வேலை சார்ந்த படிப்புகளை வழங்குவதை மய்யமாகக் கொண்டிருக்கும் இந்தப் பயிற்சித் திட்டம், நொய்டா, லக்னோ, மதுரை, சென்னை, நாக்பூர், பெங்களூரு, விஜயவாடா அய்தராபாத் ஆகிய இடங்களில் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது, 2017இல் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தில் இதுவரை சுமார் 2000 மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.

உறுதியளிக்கப்படும் வேலை

உறுதியளிக்கப்படும் வேலை என்பதே இந்த திட்டத்தின் ஒரு முக்கிய அம்சம். இந்த திட்டத்தில் இணையும் மாணவர்களுக்கு, மென்பொருள் மேம்பாடு, உள்கட்டமைப்பு மேலாண்மை, வடிவமைப்பு பொறியியல் ஆகியவற்றில் பங்கேற்று தங்கள் தொழில்முறை வாழ்க்கையைத் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கிறது, மேலும், அந்த நிறுவனத்தின் முக்கியமான திட்டப்பணிகளில் (Projects) இணைந்து பணியாற்றும் வாய்ப்பையும் அவர்கள் பெறுகிறார்கள்.

முழுமையான பயிற்சிமுறை

12ஆம் வகுப்புக்குப் பின்னர், வேலைக்கு உத்தரவாதம் அளிக்கும் படிப்புகளைத் தேடும் மாணவர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு. ஓராண்டு TechBee பயிற்சித் திட்டம், பின்வரும் கூறுகளைக் கொண்டுள்ளது:

அடிப்படை பயிற்சி

மாணவர்களுக்கு தொழில்நுட்பத்தின் அடிப்படை கூறுகளில் பயிற்சி அளிக்கப் படுகிறது. இது அவர்களுக்கு அங்கே வேலையில் ஈடுபடுவதற்குத் தேவையான திறனையும் தகுதியையும் அளிக்கிறது.

 கூடுதல் தகவல்களுக்கு: https://www.hcltechbee.com/



No comments:

Post a Comment