3 வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா 29ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல்..! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 28, 2021

3 வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா 29ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல்..!

புதுடில்லி, நவ.23 வேளாண் சட்டங்கள் ரத்து செய்வ தற்கான மசோதா வரும் 29ஆம் தேதி நாடாளு மன்றத்தில் தாக்கல் செய் யப்படும் என ஒன்றிய வேளாண்துறை அமைச் சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்து உள்ளார்.

விவசாய விளை பொருள் வியாபாரம் மற் றும் வர்த்தகம் (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத் துதல்) சட்டம், விவசாயிகளுக்கு (அதிகாரம் அளித்தல் மற்றும் பாது காப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவ சாய சேவைகள் சட்டம், அத்தியாவசிய பொருட் கள் திருத்த சட்டம் ஆகிய 3 சட்டங்களை மத்தியில் ஆளும் பா... கூட்டணி அரசு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கொண்டு வந்தது.

இந்த சட்டங்கள், விவ சாயிகளின் நலன்களுக் காக கொண்டு வரப்பட் டதாக ஒன்றிய அரசு கூறி னாலும் அதை விவசாயிகள் ஏற்கவில்லை. இந்த சட்டங்கள் விவசாயி களின் நலன்களுக்கு எதி ரானவை என ஒருமித்த குரலில் கூறி, அவற்றை திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்தி தலை நகர் டில்லியின் எல்லை களை முற்றுகையிட்டு ஓராண்டு காலமாக போராடி வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 19ஆம் தேதி சீக்கிய மதத்தை நிறுவிய குருநானக் பிறந்த நாளில் பிரதமர் மோடி, நாட்டு மக்களுக்கு உரையாற்றி னார். அப்போது அவர் 3 வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்படும் என அதிரடியாக அறிவித் தார். இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் 3 வேளாண் சட்டங்களை யும் ரத்து செய்வதற்கான அரசியல் சாசன செயல் முறை செய்து முடிக்கப் படும் எனவும் குறிப்பிட் டார்.

ஒன்றிய அமைச்ச ரவை கூட்டம் பிரதமர் மோடிதலைமையில் டில்லியில் கடந்த 24ஆம் தேதி நடந்தது. இந்த கூட்டத்தில் 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்வதற்கான வேளாண் சட்டங்கள்ரத்து மசோதா-2021-க்கு ஒப்பு தல் வழங்கப்பட்டது.

இந்த மசோதா நாளை 29.11.2021 அன்று தொடங்குகிற நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடரில் தாக்கலாகிறது.

இது குறித்து பேட்டி அளித்தஒன்றிய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், மூன்று விவசாய சட்டங்களை ரத்து செய் வதற்கானமசோதா, குளிர்காலகூட்டத் தொடரின் முதல் நாளில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றுதெரிவித்து உள்ளார்.

No comments:

Post a Comment