பேரிடர் காலத்தில் திறம்பட செயல்பட்ட மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 28, 2021

பேரிடர் காலத்தில் திறம்பட செயல்பட்ட மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

சென்னை , நவ.28 கரோனா பேரிடர் காலத்தில் திறம் பட செயல் பட்டதற்காக மா.சுப்பிரமணியனுக்கு, இங்கிலாந்து நாடாளு மன்றத்தில் நடந்த நிகழ் வில், வாழ்நாள் சாதனை யாளர் விருது வழங்கப் பட்டது.

முதல்-அமைச்சர் மு..ஸ்டா லின் தலைமையிலான அமைச்சரவை யில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக பொறுப்பு வகிப்பவர் மா.சுப்பிர மணியன். இவர், தமிழ் நாட்டில் இருந்து கரோனா தொற்றின் பாதிப்பை ஒழித்துக்கட்டிவிட வேண் டும் என்ற முனைப்பில் இரவு, பகல் பாராமல் தீவிர தடுப்பு நடவடிக்கை களை மேற்கொண்டு வருகிறார்.

கரோனாவை தடுக் கும் கேடயமாக விளங் கும் தடுப்பூ சியை போட் டுக்கொள்வதற்கு பொது மக்களை அறிவுறுத்துவ தோடு, மாவட்டங்கள் தோறும் சென்று அதி காரிகளோடு தொடர்ச்சி யாக ஆய்வு கூட்டங்களை நடத்தி, முதலமைச்சரின் உத்தரவின் பேரில் கரோனா தடுப்பு நடவ டிக்கைகளுக்காக பல அடுக்கடுக்கான அறிவு றுத்தல்களை யும் வழங்கி வருகிறார்.

சரியான நேரத்தில், சரியாக எடுக்கப்படும் மா.சுப்பிரமணியனின் துரித நடவடிக்கைகளால் தமிழ்நாட்டில் கரோனா தொற்றின் பாதிப்புகணிச மாக குறைந்துகொண்டே வருகிறது. இருப்பினும், தமிழகத்தில் கரோனா பாதிப்பு இல்லாத நிலையை உருவாக்குவதே தனது லட்சியமாக கொண்டு அவர் தொடர்ந்து களப் பணியாற்றி வருகிறார்.

முதலமைச்சர் மு..ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில், கரோனா பேரிடர் காலத்தில் திறம் பட செயல்பட்டதற்காக அமைச்சர் மா.சுப்பி ரமணியனின் மெச்சத் தகுந்த சேவைக்கு இங் கிலாந்தில் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

உலக தமிழ் நிறுவனம் விருது

உலக தமிழ் நிறுவனம் (அய்க்கிய பேரரசு) சார் பில் லண்டன் 4ஆவது பன்னாட்டு மருத்துவ சிறப்பு விருதுகள் வழங் கும் விழா இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உள்ளஹவுஸ் ஆப் காமன்ஸ்அரங்கில் நடந் தது. இதில், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறையில் சிறப் பாக பணியாற்றி வருவதற்காக வும், கரோனா பேரிடர் பெருந்தொற்று காலத் தில் திறம் பட செயல் பட்டதற்காகவும் வாழ் நாள் சாதனையாளர் விருது, அமைச்சர் மா.சுப் பிரமணியனுக்கு வழங் கப்பட்டது. இந்த விரு தினை மா.சுப்பிரமணிய னின் மகன் டாக்டர் செழி யன் மற்றும் அவருடைய குடும்பத்தினர் பெற்றுக் கொண்ட னர்.

இந்த நிகழ்வில் உலக தமிழ் நிறுவனத்தின் தலைவர் ஜேக்கப் ரவி பாலன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment