ஏட்டுத் திக்குகளிலிருந்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 27, 2021

ஏட்டுத் திக்குகளிலிருந்து

 நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

 · அரசமைப்பின் 14ஆவது பிரிவின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட சமத்துவத்திற்கான உரிமை என்பது தனிமனித உரிமையாகும். அரசு மற்றும் அதன் அமைப்புகளுக்கு எதிராக செயல்படுத்தக்கூடிய நபருக்கு ஆதரவாக உள்ள உரிமையாகும் என உச்ச நீதிமன்றம் கருத்து.

தி இந்து:

· புதுப்பிக்கப்பட்ட தேசிய மக்கள்தொகை பதிவேடு   சர்ச்சைக்குரிய கேள்விகளைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.

தி டெலிகிராப்:

· 2002 குஜராத் கலவரம் தொடர்பான வழக்கில், பிரதமர் மோடி மீதான முக்கிய ஆதாரங்களை எஸ்அய்டி புறக்கணித்ததாக ஜாகியா ஜாஃப்ரி கூறியுள்ளார்.

டைம்ஸ் ஆப் இந்தியா:

· தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் பிரிவினர்க்கான பதவி உயர்வில் இட ஒதுக்கீடு மக்கள்தொகை விகிதாச்சாரத்தில் இருக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு வாதம்.

· உயர்ஜாதி வருமானம் குறைந்தோர்க்கு நிர்ணயம் செய்யப்பட்ட ஆண்டுக்கு ரூ. 8 லட்சம் வருமான வரம்பு அதிகமான பேர்களை உள்ளடக்கியதாக இல்லை என உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு மனு.

· இந்தி திணிப்பு குறித்த கருத்தை திரும்பப் பெறுமாறு இந்திய தணிக்கையாளர் கழக (அய்சிஏஅய்) தலைவருக்கு  மதுரை எம்.பி வெங்கடேசன் கடிதம்.

 - குடந்தை கருணா

No comments:

Post a Comment