ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி வழங்க ஒப்புதல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 22, 2021

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி வழங்க ஒப்புதல்

சென்னை, அக்.22  ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு வழங்க ஒன்றிய அமைச் சரவை நேற்று (21.10.2021) ஒப்புதல் வழங்கியுள்ளது.

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அக விலைப்படி உயர்த்தப்படுவது வழக்கம். அதிகரித்து வரும் பணவீக்கத்திற்கு ஏற்ப ஒன்றிய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு இந்த அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது.

கரோனா காரணமாக கடந்த 2020-ஆம் ஆண்டில் இருந்து அகவிலைப்படி உயர்த்தப்படாமல் இருந்தது. இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 11 சதவிகிதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டது.

இதன் பிறகு தற்போது ஜூலை மாதத்திற்குரிய அகவிலைப்படியை 3 சதவிகிதம் உயர்த்த ஒன்றிய அரசு முடிவு செய்தது. இதன் மூலம் ஏற்கெனவே 28 சதவிகிதம் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. இது 31 சதவிகிமாக உயர்த்தப்படுகிறது.

இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று, ஒன்றிய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோருக்கு 3 சவிகிதம் அகவிலைப்படி உயர்த்தி வழங்கும் முடிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த உயர்வு கடந்த ஜூலை 1-ஆம் தேதி முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும் எனவும், இதற்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகவும் ஒன்றிய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.

இதன் மூலம் 48 லட்சம் ஒன்றிய அரசு ஊழியர்களும், 68.62 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன் பெறுவார்கள். இதன் மூலம் ஒன்றிய அரசுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ. 9,488.70 கோடி கூடுதல் செலவு ஏற்படும்.

 

பொள்ளாச்சி பாலியல் வழக்கு:

காவல்துறையினர் ஏழு பேர்

பணியிடை நீக்கம்

பொள்ளாச்சி, அக்.22 பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதானவர்கள், உறவினர்களை சந்திக்க அனுமதி அளித்ததாக ஆயுதப்படை சிறப்பு எஸ்.அய். உள்ளிட்ட 7 காவல்துறையினர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதானவர் களுக்கு சிறை வழிக்காவல் விதிகளை மீறி சாலை யோரத்தில் உறவினர்களை சந்திக்க அனுமதி அளித்ததாக ஆயுதப்படை சிறப்பு எஸ்.அய். உள்ளிட்ட 7 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப் பட்ட வசந்தகுமார், திருநாவுக்கரசு, மணிவண்ணன், சதீஷ் மற்றும் சபரிராஜன் ஆகியோர் சேலம் மத்திய சிறையில் இருந்து வழக்கு விசாரணைக்காக கோவை மகளிர் நீதிமன்றம் கொண்டு செல்லப்பட்டனர்.

பின்னர் சேலம் திரும்பும் வழியில், சிறை வழிக்காவல் விதிமுறைகளை மீறி சாலையோரத்தில் வாகனத்தை நிறுத்தி கைதிகள் அவர்களின் உறவி னர்களை சந்திப்பதற்கு காவல்துறையினர் அனுமதித் தனர். இதுதொடர்பான தகவல்கள் சமூக வலைத் தளங்களில் வெளியானது.

இந்த நிலையில், சேலம் மாநகர காவல் துறை கண்காணிப்பாளர்  நஜ்மல் ஹோடா, சேலம் ஆயுதப் படை சிறப்பு காவல்துறை ஆய்வாளர் சுப்பிரமணியம், மற்றும் காவலர்கள் பிரபு, வேல்குமார் ராஜ்குமார், நடராஜன், ராஜேஷ்குமார், கார்த்தி உள்ளிட்ட 7 பேரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

 

இணைய வழி வகுப்புகள்: 

சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை,அக்.22 இணையதளத்தில் வகுப்புகள் நடத்துவது தொடர்பான விதிகளை வகுக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது.

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களும் தடுப்பூசி முன்னுரிமை அளித்து வழங்கவேண்டும் என்றும் பள்ளிகளை காணொலிக் காட்சி மூலம் வழங்குவதில் இருந்து நேரடியாக வழங்கவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில்  வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் கல்வியை எளிதில் அணுகும் வகையில் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமும், நேரடியாகவும் வகுப்புகளை நடத்தலாம்.

உடல்நலம் சரியில்லாத மாற்றுத்திறனாளி மாணவர்கள் இணைய வகுப்புகளை தேர்ந்தெடுக்க வாய்ப்பு தரவேண்டும். எந்தெந்த நாளில் நேரடி வகுப்பு, இணைய வழி வகுப்பு நடத்தப்படும் என்பதை அறிவித்து விதிகளை வகுக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தொடர்ந்து

பள்ளி, கல்லூரிகள், நீதிமன்றமும் இணையம் மூலம் நடத்தப்படுவதால் பல சாதகமும், பாதகமும் உள்ளது. மாணவர்களுக்கு இணையம் மூலமும், நேரடியாகவும் வகுப்புகளை நடத்தலாம் எனவும்  கரோனா 3ஆம் அலைக்கு வாய்ப்பில்லை என அறிக் கைகள் வெளியாவதால் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் என நம்பிக்கையுள்ளது என தெரிவித் துள்ளனர்.

 

முதுநிலை ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க அவகாசம்  நீட்டிப்பு

சென்னை,அக்.22 முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர், கணினி பயிற்றுநர் ஆகிய காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர், கணினி பயிற்றுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் மேலும் நீட்டிப்பு செய்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

வரும் 31ஆம் தேதி வரை ஏற்கெனவே அவகாசம் நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில், வயது உச்ச வரம்பு அதிகரிக்கப்பட்டதால் கூடுதலாக நவம்பர் 9ஆம் தேதி வரை விண்ணப்பிக்கும் அவகாசம் நீட்டிக்கப் பட்டுள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2020-2021ஆம் கல்வி ஆண்டிற்கான முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர், கணினி பயிற்றுநர் ஆகிய காலிப் பணியிடங்களுக்கு போட்டித்தேர்வு மூலம் நேரடி நியமனம் செய்வதற்கு கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி முதல் வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் இணையதள வழி வாயிலாக செப்.18 முதல் பெறப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment