அரசு செயல்பாடுகள் குறித்து ‘மின்னணு தகவல் பலகை’ முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தன் அறையில் இருந்தே கண்காணிக்க ஏற்பாடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 22, 2021

அரசு செயல்பாடுகள் குறித்து ‘மின்னணு தகவல் பலகை’ முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தன் அறையில் இருந்தே கண்காணிக்க ஏற்பாடு

சென்னை, அக்.22 தமிழ்நாடு அரசின் அனைத்து திட்டங்கள், அறிவிப்பு களின் மீதான நடவடிக்கைகளை முதல மைச்சர் மு.. ஸ்டாலின், தன் அறையில் இருந்தபடியே கண்காணிக்கும் வகை யில், நிகழ்நிலை புள்ளிவிவரங்களுடன்மின்னணு தகவல் பலகைதயாராகி வருகிறது.

 கடந்த மாதம் நடைபெற்ற துறை செயலர்களுடனான கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ‘‘தேர்தல் வாக் குறுதிகள், சட்டப்பேரவை அறிவிப் புகள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டிய கடமை, பொறுப்பு நம்மிடம் உள்ளது. இவை அனைத்தையும் படிப் படியாக நாம் நிறைவேற்ற வேண்டும். அடுத்து இருப்பது 6 மாதங்கள் தான். அதன்பின் அடுத்த நிதிநிலை அறிக் கையை தாக்கல் செய்ய வேண்டும். அதற்குள் அறிவிப்புகளை செயல்படுத்த வேண் டும்.

எனவே, அனைத்துத் துறைகளின் திட்டங்கள் குறித்த தகவல்களை தமிழ் நாடு மின் ஆளுமை முகமை மூலம் ஆன்லைன் தகவல் பலகையை ஏற் படுத்தி, அதன்மூலம் தினசரி நான் பார்க்கப் போகிறேன். என் அறையிலேயே பார்க்கும் வகையில் ஏற்பாடு நடைபெற்று வருகிறது. வாக்குறுதிகள், வெளியிட்ட அறிவிப்புகள், பணிகளின் முன்னேற்றம் குறித்த தகவல்கள் அதில் இடம் பெறும். வாரம் ஒருமுறை இதை வைத்து ஆய்வு செய்யப் போகிறேன்’’ என்றார்.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, முதலமைச்சருக்கான மின்னணு தகவல் பலகை - ‘டேஷ்போர்டுதயாராகி வரு கிறது. இதற்கான ஒருங்கிணைப்பாளராக தமிழ்நாடு மின்ஆளுமை முகமையின் ஆலோசகராக உள்ள டேவிதார் நியமிக்கப்பட் டுள்ளார்.

இதுகுறித்து மின்னாளுமை முகமை அதிகாரி கூறியதாவது:

முதலமைச்சருக்கானடேஷ் போர்டுதயாராகி வருகிறது. வழக்கமான தக வல்கள் போல் அல்லாமல் ஒவ்வொரு துறைதோறும், திட்டங்கள்தோறும் நிகழ்நிலை புள்ளிவிவரங்கள் கோரப் பட்டு, அவை ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, ஒரு திட்டத்தை எடுத்தால் அத்திட்டம் தொடங்கப்பட் டது முதல் தற்போது வரையுள்ள புள்ளிவிவரங்கள், நிதி ஒதுக்கீடு, திட் டத்தின் தற்போதைய நிலை, செயல்பாடு உள்ளிட்ட அனைத்தும் அடங்கிய முழுமையான மின்னணு தகவல் பலகையாக தயாரிக்கப்பட்டு வருகிறது.விரைவில் பணிகள் முழுமை பெறும்.

இந்த மின்னணு தகவல் பலகைக்கான மென்பொருள் உருவாக்கும் பணியில் 50-க்கும் மேற்பட்ட மென் பொறியா ளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழ் நாடு தகவல் தொழில்நுட்பத் துறையின் பொறியாளர்கள் மேற்பார்வையாளர் களாகப் பணி யாற்றி வருகின்றனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பிற மாநிலங்களில்...

தமிழ்நாட்டில் இந்த மின்னணு தகவல் பலகை முதல்முறையாக உரு வாக்கப்படுகிறது. அதேநேரம், பிரதமர் அலுவலகத்தில் ஏற்கெனவே இந்த வசதி செய்யப்பட்டுள்ளது. அவர் விரும் பும் திட்டத்தின் செயல்பாடுகளை உட னடியாகத் தெரிந்துகொள்ள முடியும்.

இந்த முறையைப் பின்பற்றி, மத்தி யப்பிரதேசம், ஆந்திரா, நாகலாந்து, இமாசலப்பிரதேசம், உத்தராகண்ட், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களிலும் முதலமைச்சருக்கான மின்னணு தகவல் பலகை உள்ளது. இதில், திட்டங்களின் நிலை குறித்துபொதுமக்களும் அறிந்து கொள்ளும் வசதிகள் செய்யப்பட் டுள்ளன. ஆந்திர முதலமைச்சரின் மின் னணு தகவல் பலகையில் மாநிலத்தில் உள்ளதெருவிளக்குகள் விவரம் வரை தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றை அனைவரும் பார்க்க முடியும்.

No comments:

Post a Comment