ஆசிரியர்களுக்கு கட்டாய இடமாறுதல் கிடையாது பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 22, 2021

ஆசிரியர்களுக்கு கட்டாய இடமாறுதல் கிடையாது பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு

சென்னை, அக்.22 பள்ளிகள் திறப்பு மற்றும் இல்லம் தேடி கல்வித் திட்டம் செயல்படுத்துவது குறித்து பள்ளிக் கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் சென்னை டிபிஅய் வளாகத்தில் நேற்று  (21.10.2021) நடைபெற்றது. தொடக்கக் கல்வி இயக்குநர் அறிவொளி, இணை இயக்குநர் சாந்தி ஆகியோர் உடனிருந் தனர். 

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு கட்டாய இடமாறுதல் வழங்கப்படாது என்று கருத்துக்கேட்பு கூட்டத்தில் பள்ளிக்கல்வித் துறை விளக்கம் அளித்துள்ளது.

 பின்னர் பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார் பேசியதாவது:

கரோனா பரவலால் மாணவர் களிடம் ஏற்பட்டுள்ள கற்றல் குறை பாட்டைச் சரிசெய்யவே இல்லம் தேடி கல்வி திட்டம் அமல் செய்யப்படுகிறது. இதில் வேறு எந்த உள்நோக்கமும் இல்லை. மேலும், ஆசிரியர்களுக்கு கட்டாய மாறுதல்வழங்கப்படும் என்ப தில் உண்மையில்லை. இதேபோல், வடமாவட்டங்களில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் ஆசிரியர்கள், விரும் பினால் தென் மாவட்டங்களுக்கு செல் வதற்கும் முன்னுரிமை வழங்கப்படும்.

சுமார் 20 மாதங்களுக்கு பிறகு பள் ளிகள் திறக்கப்படுவதால் மாணவர் களை உரிய முறையில் ஆசிரியர்கள் வரவேற்க வேண்டியது அவசியம். குழந்தைகளை உளவியல் ரீதியாக தயார் செய்த பின்னர் பாடங்களை நடத்த வேண்டும். தற்போது ஆசிரியர் கள் வைத்த கோரிக்கைகள் குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment