ஒற்றைப் பத்தி - பட்டினிப் புரட்சி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 22, 2021

ஒற்றைப் பத்தி - பட்டினிப் புரட்சி!

நகர்ப்புறங்கள் பிராமணத் தன்மையுடனும், கிராமப் பகுதிகள் பஞ்சமத் தன்மையுடனும் இருக்கின்றன என்றும், இது ஒருவகை வருணாசிரம நிலைதான் என்றும் கூறுவார் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார்.

‘‘கிராம முன்னேற்றமென் றால், நாட்டில் கிராமங்களே இல்லாமல் செய்து விடுவது தான். ஏனெனில், கிராமம் என்பது ஒருவித வருணாசிரம தர்ம முறையில் கீழான ஜாதிக்குச் சமமாய் இருப்பது.''

- தந்தை பெரியார்

(பெரியார் 99 ஆம் பிறந்த நாள்விடுதலை' மலர், பக்கம் 52)

‘‘ஒரு சமூகம் முன்னேற் றம் அடைந்தது என்றால், அந்தச் சமூகத்தில் எப்படி கீழ்ஜாதி, ஈன ஜாதி மக்கள் என்பவர்கள் இருக்கக் கூடாதோ, அதுபோல்தான் ஒரு நாடு முன்னேற்றம் அடைந்தது என்றால், அந்த நாட்டில் கிராமங்கள், பட்டி கள் தொட்டிகள் இருக்கக் கூடாது.''

- தந்தை பெரியார்

(பெரியார் 99 ஆம் பிறந்த நாள்விடுதலை' மலர், பக்கம் 55)

ஏதோ பொத்தாம் பொது வில் கருத்தைப் பதிவு செய்பவர் அல்லர் பெரியார்; பிரத்தியட்ச நிலையைக் கண்ணெதிரே கண்டும், அனுபவ முறையிலும், எதை யும் வேர் வரை சென்று ஊடுருவி துல்லியமாக அறிந்த முறையிலும் கணிக் கும் காலத்தை வென்ற கருத்துகள் அவருடையது ஆகும்.

‘‘பட்டினிப் புரட்சி'' எனும் நூல் - பரிதி என்பவரால் படைக்கப்பட்டது. 2017 இல் விடியல் பதிப்பகம் வெளி யிட்ட அரிய நூல் இது.

அதன் 39 ஆம் பக்கத்தில் ஓர் அட்டவணை.

(1) மொத்த உணவுச் செலவு (ஒருவருக்கு - ஒரு மாதத்துக்கு) நகர்ப்புறத்தில் ரூ.2859.12 - கிராமப்புறத்தில் உணவுச் செலவு ஒரு மாதத் துக்கு ரூ.315.84.

பழங்கள் நகர்ப்புறத்தில் ரூ.244.30. கிராமப்புறத்தில் ரூ.3.99.

காய்கறி நகர்ப்புறத்தில் ரூ.197.38. கிராமப்புறத்தில் ரூ.52.32.

பருப்பு பயறு வகைகள் நகர்ப்புறத்தில் ரூ.76.50. கிராமப்புறத்தில் ரூ.22.11

தானியங்கள் நகர்ப் புறத்தில் ரூ.224.51 கிராமப் புறத்தில் ரூ.102.96.

முட்டை, மீன், இறைச்சி நகர்ப்புறத்தில் ரூ.200.76 கிராமப்புறத்தில் ரூ.13.87.

சமையல் எண்ணெய் நகர்ப்புறத்தில் ரூ.102.55. கிராமப்புறத்தில் ரூ.26.45.

மணப்பொருள்கள் நகர்ப்புறத்தில் ரூ.92.77 கிராமப்புறத்தில் ரூ.24.23.

குடிப்பு  (பானம்) நகர்ப்புறத்தில் ரூ.180.53 கிராமப்புறத்தில் ரூ.8.88

‘‘பட்டினிப் புரட்சி'' எனும் இந்நூல் உழவு - உணவு - சூழல் - குழுபற்றிய ஆய்வு நூலாகும்.

தந்தை பெரியார் கூறும் நகர கிராமப் பேதம் என்பது துல்லியமான ஆய்வுமூலம் நிரூபிக்கப்படவில்லையா?

 - மயிலாடன்

No comments:

Post a Comment