புதுடில்லி, அக்.31- நூறு நாள் வேலைத்திட்டத்தை மோடி தலைமையிலான ஒன்றிய அரசு திட்டமிட்டு முடக்கி வருகிறது என்பதற்கான புதிய ஆதாரங்கள் வெளிப்பட்டு உள்ளன. இந்தத் திட்டத் திற்கு இந்த நிதியாண்டின் பாதியி லேயே நிதி இல்லாமல் போய் விட்டது.
இந்நிலையில், மாநிலங்கள் தங்கள் சொந்த நிதியிலிருந்து தாம தமின்றி ஊதியம் வழங்க வேண்டும்; ஒன்றிய அரசு நிதி ஒதுக்கீடு செய்யும் போது அதை திரும்ப எடுத்துக் கொள் ளலாம் என ஒன்றிய அரசு புது வியாக்கியானம் செய்யத் தொடங்கியுள்ளது.
கரோனா தொற்றுப்பரவல். தற்போதைய பொருளாதார நெருக்கடி ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட கிராமப்புற மக்களுக்கு 100 நாள் வேலை தான் கை கொடுத்து வந்தது. சம்பளம் வழங்க தாமதிப்பதன் மூலம் தொழிலாளர்களை வேறு வேலைகளுக்கு செல்லும் நிர்ப்பந்தத்தை உருவாக்கி வருகிறது. அதோடு மட்டுமல்ல பல மாநிலங்கள் 100 நாள் வேலையை செயற்கையாக உருவாக்குகின்றன என்று ஒன் றிய அரசு இப்போது புதிதாக குற்றம் சாட்டுகிறது. மகாத்மா காந்தி கிராமப்புற வேலை உறுதித் திட்டம் அய்க்கிய முற் போக்குக் கூட்டணி (முதல்) ஆட்சிக் காலத்தில் இடதுசாரிக் கட்சிகளின் வலியுறுத்தலால் கொண்டுவரப்பட்ட திட்டம் இது என்பது குறிப்பிடத்தக் கது.
கிராமப்புறத்தில் வசிக்கும் ஒரு குடும்பத்திற்கு வருடத்திற்கு 100 நாட்கள் கண்டிப்பாக வேலை வழங்க வேண்டும் என் பதுதான் திட்டத்தின் பிரதான நோக்கம். கடந்த ஆண்டு கரோனா தொற்றுப்பரவலின் போது இந்தத் திட்டத்திற்கு நிதிநிலை அறிக்கையில் ரூ.1.11 லட் சம் கோடி ஒதுக்கப்பட்டது. இதன் மூலம் சுமார் 11 கோடி தொழிலாளர்கள் ஓரளவு மூச்சுவிட்டனர். இருப்பினும், இந்தத் திட்டத்திற்கு 2021-2022 நிதிநிலை அறிக்கையில் வெறும் ரூ. 73,000 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டது. கரோனா ஊர டங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுவிட்டதாக வும், ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதி தீர்ந்துவிட்டால் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என ஒன்றிய அரசு கூறுகிறது. அக்டோபர் 29 நிலவரப்படி, உழைப்பாளி மக்களுக்கு வழங்க வேண்டிய ஊதியம் உள்ளிட்ட மொத் தச் செலவு ரூ.79,810 கோடியை எட்டியுள் ளது. 2021-2022இல் ஒதுக்கப் பட்டுள்ளதோ ரூ.73 ஆயிரம் கோடி. அக்டோபர் 30ஆம் தேதி வரை மொத்தச் செல வீனம் ரூ.79 ஆயிரத்து 810 கோடி (அதாவது இப்போதே ரூ.6,810 கோடி தேவைப்படு கிறது). அடுத்த நிதியாண்டிற்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ளன. இதுகுறித்து அகில இந்திய விவசாயிகள் சங்க தலைவர்களில் ஒரு வரான நிகில்தே கூறுகையில், 100 நாள் வேலை பாதியிலேயே மூடப் படும் அபாயத்தை நாங்கள் எதிர்கொண்டிருக்கிறோம். திட்டச் செலவை யார் ஏற்கப் போகிறார்கள்? தொற்று நோயின் தாக்கத்தால் ஏற்கெ னவே ஏழை-எளிய மக்கள் கடு மையாகப் பாதிக்கப்பட்டுள் ளனர் என்றார் என்பது குறிப் பிடத்தக்கது.
No comments:
Post a Comment