ஒன்றிய அரசு முன்பு கையைக் கட்டி நிற்பேன் என நினைக்க வேண்டாம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 31, 2021

ஒன்றிய அரசு முன்பு கையைக் கட்டி நிற்பேன் என நினைக்க வேண்டாம்!

பாஜக தலைமைக்கு வருண் காந்தி எச்சரிக்கை

புதுடில்லி, அக். 31- விவசாயிகள் சுரண் டப்படுவது தெரிய வந்தால், ஒன் றிய அரசு முன்பு கையைக் கட்டி வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டி ருக்க மாட்டேன் என்று பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் வருண் காந்தி நேரடியாகவே மோடி அரசுக்கு எச்சரிக்கை விடுத் துள்ளார்.

ஒன்றிய அரசின் வேளாண் சட் டங்க ளுக்கு எதிராக .பி. மாநிலம் லக்கிம்பூர் கெரியில், விவசாயிகள் போராட்டம் நடத்திய நிலையில், அவர்கள் மீது பாஜகவைச் சேர்ந்த ஒன்றிய உள்துறை இணையமைச்சர் அஜய் குமார் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா காரை ஏற்றி 4 பேரை படுகொலை செய்தார்.

இந்நிலையில்தான் புதிய காட்சிப்பதிவு ஒன்றை வருண் காந்தி வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: குறைந்த பட்ச ஆதரவு விலைக்கு  சட்டப் பூர்வ உத்தரவாதம் இல்லாத வரை, விவசாயிகள் மண்டிகளால் சுரண் டப்படுவார்கள். நீங்க ளும் (ஒன்றிய அரசு) பணவீக்கத்தை எதிர் கொள் கிறீர்கள்.

நாட்டில் உரத் தட்டுப்பாடு இருப்பதை நீங்கள் பார்க்கிறீர்கள். இயற்கை சீற்றத்தால் விவசாயிகள் எப்படி பலியாகி இருக்கிறார்கள் என்பதும் உங்களுக்குத் தெரி யும். இவ்வளவு தடைகளையும் தாண்டி, விவ சாயிகள் அறுவடை செய்ததை விற்பதற்கு மண்டிக்கு வந்தால், ஈரப்பதம் இருக்கிறது, உடைந்து இருக்கிறது, சுத்தமாக இல்லை என்று சொல்லி அதை நிராகரிக் கிறீர்கள். விவசாயியும் வேறு வழியில்லாமல் அதை விற்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். அப்புறம் அவர்கள் என்ன செய் வார்கள். இறுதியாக அரிசி ஆலை இடைத்தரகர்களிடம் குறைந்த விலைக்கு விற்று விடுகிறார்கள்.

அதன்பிறகு அதே அரிசி உங் களிடம் 1940-க்கு வருகிறது. இது போன்ற சுரண்டல் நாடு முழுவதும் நடைபெறுகிறது.

இப்படி உடைந்து கிடக்கும் கோடிக்கணக்கான விவசாயிக ளின் இழப்பை ஏன் சம்பாதிக்க வேண்டும்? என்று வருண் கேள்வி எழுப்பி யுள்ளார். இன்று முதல் ஒவ்வொரு பெரிய கொள்முதல் மய்யத்திலும் எனது பிரதிநிதி ஒரு வர் இருப்பார். அவர் எல்லாவற் றையும் பதிவு செய்வார். ஆதாரங் களை சேகரித்து, விவசாயிகளுக்கு எதிராக ஊழல், கொடுமை, சுரண் டல் நடந்திருப்பது தெரிய வந்தால், ஒன்றிய அரசுக்கு முன் கையைக் கட்டிக்கொண்டு இருக்கமாட் டேன், நேராக நீதிமன்றத்திற்கு சென்று காரணமானவர்களையும் கைது செய்ய வைப்பேன் என்றும் அவர் மோடி அரசை எச்சரித்து உள்ளார்.


No comments:

Post a Comment