பெட்ரோலில் லாபம் பார்க்கும் தொழிலதிபர்கள் ராகுல் குற்றச்சாட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 31, 2021

பெட்ரோலில் லாபம் பார்க்கும் தொழிலதிபர்கள் ராகுல் குற்றச்சாட்டு

பனாஜி, அக். 31 கோவா சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, அம்மாநிலத் தில் ராகுல் காந்தி நேற்று (30.10.2021) சுற்றுப்பய ணம் மேற்கொண்டார். வெல்ஸோ கிராமத்தில் நடைபெற்ற பொதுக்கூட் டம் ஒன்றில் அவர் பேசிய தாவது:

பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் உண வுப் பொருட்கள், பெட் ரோலியப் பொருட்கள், சமையல் எரிவாயு ஆகிய வற்றின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந் துள்ளது. இன்றைக்கு கச்சாஎண்ணெயின் விலை வர லாறு காணாத சரிவைச் சந்தித் துள்ளது. அப்படி இருந்தும் கூட, பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல் அவற்றின் விலையை ஒன் றிய அரசு உயர்த்தி வரு கிறது. பெட்ரோல், டீசல் விலை உயர் வால் பிரதம ருக்கு நெருக்கமான 4 முதல் 5 தொழிலதிபர்களே லாபம் அடைகிறார்கள் என்பது தெரியவரும்.

கோவாவில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடை பெறவுள் ளது. இந்த தேர்தலில் பாஜ கவை மக்கள் தோற்கடிக்கப் போவது உறுதி. கோவா மக்கள் அரசியல் மாற் றத்தை எதிர்பார்க்கிறார் கள். அந்த மாற்றத்தை காங்கிரஸ் ஏற்படுத்தும். இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

No comments:

Post a Comment