பொருளாதாரத்தில் நலிந்தோருக்கான ஒதுக்கீடு முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வை நிறுத்தி வைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 26, 2021

பொருளாதாரத்தில் நலிந்தோருக்கான ஒதுக்கீடு முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வை நிறுத்தி வைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடில்லி, அக்.26- ஜாதி அடிப்படையில் சமு தாயத்தில் புறக்கணிக்கப்பட்டவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்புகளில் உரிமைகளை வழங்கிட சமூகம் மற்றும் கல்விரீதியில் அடையாளங்கண்டுபிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினத்த வருக்கு அரசமைப்புச்சட்டத்தின்படி சமூகம் மற்றும் கல்வி அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுவரும் நிலையில், ஒன்றிய பாஜக அரசு பொருளாதார அடிப்படையை நுழைத்து, அதிலும் பொருளாதாரத்தில் நலி வுற்ற உயர்ஜாதியினருக்கு என 10 விழுக்காடு இட ஒதுக்கீட்டை அரசமைப்புச்சட்டத்துக்கு விரோதமாக அறிவித்தது. மேலும், மண்டல் பரிந்துரையின்படி பிற்படுத்தப்பட்டவர் களுக்கு அளிக்கப்பட வேண்டிய 27 விழுக் காடு ஒதுக்கீட்டையும் முழுமையாக வழங் காமல் ஒன்றிய அரசு கிடப்பில் போட்டு வந் துள்ளது. ஒன்றிய பாஜக அரசின் இதுபோன்ற சமூகநீதி விரோதப் போக்கைக் கண்டித்து பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் உரிமைக்கான அமைப்பினர், சமூக நீதிக்கான செயற்பாட்டாளர்கள், சமூக ஆர்வ லர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள் ளனர்.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு

ஒன்றிய அரசால் கொண்டுவரப்பட்ட பொருளாதார ரீதியில் பின்தங்கிய உயர்ஜாதி யினருக்கான ஒதுக்கீடு (EWS) மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு குறித்த வழக்கில் நீதிமன்றம் முடிவெடுக்கும் வரை முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வை நிறுத்தி வைக்கும்படி நேற்று (25.10.2021) உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் மருத்துவப்படிப்புகளுக்கு நீட் நுழைவுத்தேர்வு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இளநிலை மருத்துவப்படிப்பான  பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் போன்ற படிப்புகளுக்கும், எம்.டி., எம்.எஸ். போன்ற முதுநிலை மருத்துவப் படிப்புகளுக் கும் நீட் தேர்வு மூலம் மாணவர்கள் தேர்ந் தெடுக்கப்படுகிறார்கள். முதுநிலை மருத் துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு குறித்து அறிவிக்கப்பட்டு தேர்வு முடிவுகளும் வெளி யாகி உள்ளது. இதையடுத்து, முதுநிலை நீட் கலந்தாய்வு அக்டோபர் 24ஆம் தேதி தொடங்கி 29ஆம் தேதி  வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையில், ரூ.8 லட்சம் ஆண்டு வருமானம் பெறும் உயர்வகுப்பினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடுக்கு எதிரான வழக்கு நிலுவையில் இருப்பதால், அதுவரை முது நிலை நீட் கலந்தாய்வை  (முதுநிலை மருத் துவ படிப்பு நுழைவுத் தேர்வு) நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பொருளாதார ரீதியில் பின்தங்கியவர் களுக்கான இட ஒதுக்கீடு குறித்து நீதிமன்றம் முடிவு செய்த பிறகே கலந்தாய்வை நடத்த லாம் என்றும், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் உயர்ஜாதி ஏழைகள், இதர பிற்படுத்தப்பட்டோருக்கான ஒதுக்கீடு குறித்த வழக்கு முடியும் வரை கலந்தாய்வுக்கு தடை விதிக்கப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில், ஆகஸ்ட் 24 தொடங்கி 29 ஆம் தேதிவரை நடைபெற இருந்த முதுநிலை மருத்துவப் படிப்பு கலந்தாய்வை நிறுத்த உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம். முதுநிலை படிப்புக்கான அகில இந்திய இட ஒதுக்கீடு இடங்களில். இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்கவும் மற்றும் உயர் ஜாதி ஏழைகளுக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்கும் ஒன்றிய அரசின் முடிவை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டதை யும் அடுத்து. உச்சநீதிமன்றம் வழக்கை விசாரிக்கும் வரையில் கலந்தாய்வை நிறுத்தி வைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment