"நீட்" தேர்வு என்பது சட்டவிரோதம்; சமூகவிரோதம்; ஏழைகளுக்கு விரோதம்; பெரியாரியம் என்ற சமூக அறிவியலால், இந்த சூழ்ச்சியை வென்று காட்டுவோம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 21, 2021

"நீட்" தேர்வு என்பது சட்டவிரோதம்; சமூகவிரோதம்; ஏழைகளுக்கு விரோதம்; பெரியாரியம் என்ற சமூக அறிவியலால், இந்த சூழ்ச்சியை வென்று காட்டுவோம்!

நாகப்பட்டினத்தில் தமிழர் தலைவர் எழுச்சியுரை!

நாகப்பட்டினம், அக். 21- நீட் தேர்வு ஒழிக்கப்படவேண்டும் ஏன்? எதற்காக? கருத்தரங்கம் நாகப்பட்டினத்தில் நடைபெற்றது. அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள் முன்னிலையில்  தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.

நீட்ஒழிக்கப்பட வேண்டும் ஏன்? எதற்காக? பிரச்சாரப் பயணத்தின் நான்காம் நாளின் நிகழ்ச்சி நாகப்பட்டினம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகில் உள்ள, யாழிசை திருமண மண்டபத்தில், 20.10.2021 புதன்கிழமை அன்று மாலை 5 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நாகை மாவட்டத் தலைவர் நெப்போலியன் நிகழ்வுக்கு தலைமை வகிக்க, இணைப்புரை வழங்கி சிறப்பித்த மாவட்டச் செயலாளர் பூபேஷ்குப்தா அனைவரையும் வரவேற்றார்.

மண்டலத் தலைவர் முருகையன், மண்டலச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, திருவாரூர் மாவட்டத் தலைவர் மோகன்,  மாவட்டச் செயலாளர் கோவிந்தராஜன், மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் குணசேகரன், மாவட்டச் செயலாளர் தளபதிராஜ், காரைக்கால் மண்டலத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, தி.மு..மாவட்டச் செயலாளர் எம்.கவுதமன், நாகை சட்டமன்ற உறுப்பினர் ஆளூர்ஷாநவாஸ், கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகைமாலி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் கதிர்நிலவன், மனிதநேய மக்கள் கட்சித்தலைவர் ஜபருல்லா, தி.மு.. முன்னாள் அமைச்சர் .மதிவாணன், கழக மாநில அமைப்பாளர் ஒரத்தநாடு இரா.குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்பித்தனர்.

தொடக்கத்தில் புத்தக அறிமுக விழா நடைபெற்றது. Ôகற்போம் பெரியாரியம்Õ எனும் புத்தகத்தை, கரந்தை தமிழ்ச்சங்கம் நா.எழிலரசன் அறிமுகப்படுத்தி பேசினார். உலகளவில் உள்ள பகுத்தறிவாளர்களை ஒப்பிட்டுப் பேசி, அவர்களைவிட சிறப்பான ஒரு தலைவர், இந்த நூலின் நாயகர் என்று, பெரியாரை அறிமுகப்படுத்தினார்.

மேலும், இந்நூலில் வெற்றி பெற்ற  ஒரு மகத்தான தலைவரைப்பற்றி படிக்கப் போகிறீர்கள் என்றார். தமிழ்நாடு அரசு இதை கல்லூரிகளில் பாடப்புத்தகமாக வைக்க வேண்டும் என்று கூறிவிட்டு, வரலாற்றை சுவையான பாடமாகத் தந்திருக் கிறார் என்று நூலாசிரியரையும் பாராட்டி முடித்தார்.

அவரைத் தொடர்ந்து, முனைவர் அதிரடி அன்பழகன், ஆர்.எஸ்.எஸ் என்னும் டிரோஜன் குதிரை புத்தகத்தை அறிமுகப்படுத்திப் பேசினார். ஆர்.எஸ்.எஸ்., திராவிடர் கழகம் இரண்டின் தோற்றுவாய் குறித்து அவர் பேசினார்.

டிராய் கோட்டையை சூழ்ச்சியாகப் பிடித்தது போல, திராவிடக்கோட்டையை ஒருநாளும் பிடிக்கமுடியாது என்று கூறி புத்தக அறிமுக உரையாற்றினார்.

 தொடர்ந்து நடைபெற்ற புத்தக வெளியீட்டுவிழாவில், தி.மு.. மாவட்டச் செயலாளர் எம்.கவுதமன் வெளியிட, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாகை சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ் பெற்றுக்கொண்டார்.

அவரைத் தொடர்ந்து அனைத்து அமைப்புகளைச் சேர்ந்த பொறுப்பாளர்கள், தோழர்கள் தனிமனித இடைவெளியுடன் வரிசையாக வந்து தமிழர் தலைவரிடம் புத்தகங்களைப் பெற்றுக்கொண்டனர்.

பின்னர் சாரை சாரையாக அனைத்து அமைப்புகளையும் சேர்ந்த தோழர்கள் வரிசையாக மேடைக்கு வந்து தமிழர் தலைவருக்கும், அமைச்சருக்கும் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தனர்.

தமிழர் தலைவரின் பணிகள் குறித்து அனைத்துக்கட்சியினர்

பெருமித உரை

அதைத் தொடர்ந்து, காங்கிரஸ் மாவட்டத்தலைவர் ஆர்.என்.அமிர்தராஜா, தி.மு..மேனாள் அமைச்சர் .மதிவாணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவரும், கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினருமான நாகைமாலி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப்பொதுச்செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான ஆளூர் ஷாநாவாஸ், நாகை மாவட்ட தி.மு.. செயலாளர் எம்..கவுதமன் ஆகியோர் பெரியாரின் தேவை குறித்தும், இன்றைய திராவிடர் கழகத்தின் தலைவரான ஆசிரியரின் தேவை குறித்தும் சுருக்கமாகப் பேசி அமர்ந்தனர்.

தமிழர் தலைவர் நிறைவுரை

இறுதியாக தமிழர் தலைவர் உரையாற்றினார். 13 முறை மன்னிப்புகேட்ட சவார்க்கரை நினைவுபடுத்தியும், திராவிட மாடலான தமிழ்நாட்டு பார்முலாதான் பிரதமர் மோடியை வீட்டுக்கு அனுப்பப் போகிறது என்றும் சுட்டிக்காட்டினார். நீட் தேர்வை நம்மால் வெல்ல முடியும். அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆவதற்கு 50 ஆண்டுகளுக்கு மேல் ஆனதைச் சுட்டிக்காட்டி, நீட் தேர்விலும் நாம்தான் வெல்லப்போகிறோம். காரணம் பெரியாரியம் என்பது ஒரு சமூக அறிவியல், அதை யாராலும் வெல்ல முடியாது என்று பலத்த கைதட்டல்களுக்கிடையில் குறிப்பிட்டார். இதை ஒரு தேர்வாக எண்ணமுடியாது. இது அரசியல் சட்டவிரோதம், சமூகவிரோதம், ஏழைகளுக்கு விரோதம், தமிழில் பயின்றவர்களுக்கு விரோதம் என்று நீட் தேர்வு கூடாது என்பதற்கான ஆதாரங்களை அடுக்கினார். ஆகவே, வெற்றி பெறும்வரை போராடுவோம்! விடமாட்டோம் என்று சூளுரைத்தார். ஒரு பக்கம் நீதிமன்றங்களில் சட்டப்போராட்டம், மற்றொரு பக்கம் வீதிமன்றங்களில் போராட்டம் - வெற்றி கிட்டும்வரை தொடரும் என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.

நிகழ்ச்சி பெரியார் வலைக்காட்சி சார்பில் நேரலை செய்யப்பட்டது, இப்பணிகளை உடுமலை வடிவேல், வேணுகோபால், பிரகாஷ் ஆகியோர் மேற்கொண்டனர். அரங்கு நிறையுமளவுக்கு அனைத்து அமைப்புகளையும் சேர்ந்த தோழர்களும் பொதுமக்களும் கரோனா கால கட்டுப்பாடுகளுடன் தனி மனித இடைவெளியுடன் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

மதுரை ராஜேஸ்வரி - ராமசாமி குடும்பத்தினர் பெரியார் உலகத்திற்கு

ரூ.1 லட்சம் நன்கொடையை தமிழர் தலைவரிடம் வழங்கினர்.

நாகையில் நடைபெற்ற "நீட் தேர்வு ஒழிக்கப்பட வேண்டும் ஏன் எதற்கு?" மற்றும் "கற்போம் பெரியாரியம்" "ஆர்.எஸ்.எஸ் என்னும் டிரோஜன் குதிரை" நூல் அறிமுக விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமையில் காரைக்கால் மண்டலம் (புதுத்துறை,வடமட்டம்,மேலக்காசாக் குடி டி.ஆர். பட்டினம்நெடுக்காடு) அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் காரைக்கால் மண்டலம்  மோ.மோகன்ராஜ், .ரா.குணபாலன்-புதுத்துறை, சே.சசிகுமார்-வடமட்டம்., கு.குபேரன்-மேலக்காசாக்குடி, ரா.தினேஸ்குமார்-மேலக்காசாக்குடி, சி.சிவபுகழ்- டி.ஆர். பட்டினம், பி.பிலமோன் யூதித் ராஜ்- நெடுங்காடு ஆகியோர் கழகத்தில் இணைந்தனர். (20.10.2021)

நாகையில் நடைபெற்ற "நீட் தேர்வு ஒழிக்கப்பட வேண்டும் ஏன்? எதற்கு?" மற்றும் "கற்போம் பெரியாரியம்"  "ஆர்.எஸ்.எஸ் என்னும் டிரோஜன் குதிரை" நூல் அறிமுக விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமையில்  நாகை மாவட்டம் (புத்தூர்,புத்தகரம்)   நாகை மாவட்டம் சே.அய்யப்பன்-புத்தூர், .இளமாறன்-புத்தகரம், லெ.மணிகண்டன்-புத்தகரம் பகுதிகளைச் சேர்ந்த புதிய மாணவர்கள் கழகத்தில் இணைந்தனர். (20.10.2021)

நாகையில் நடைபெற்ற நீட் தேர்வு ஒழிக்கப்பட வேண்டும் ஏன்? எதற்கு? மற்றும் "கற்போம் பெரியாரியம்" "ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை" நூல் அறிமுக விழாவில் கலந்து கொண்டோர்.. (20.10.2021)

விவசாய தொழிலாளர் மகளிர் அணியினர் தமிழர் தலைவரை சந்தித்தனர்.

உடன்: விடுதலை சிறுத்தைகள் சட்டமன்ற உறுப்பினர் ஆளூர்ஷாநவாஸ். (20.10.2021, நாகை)

பெரியாரியல் பயிற்சி முகாமில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். (19.10.2021, திண்டுக்கல்)

நாகை மாவட்டம், புத்தகரம் கிராமத்தில் தந்தை பெரியார் படிப்பகத்தை தமிழர் தலைவர் திறந்து வைத்தார்.

 (20.10.2021)

No comments:

Post a Comment