சிலைகள்தான்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 16, 2021

சிலைகள்தான்!

இறைவனுக்குப் பல்வேறு உருவங்களையும், அந்தந்த உருவங்களுக்கேற்ற முறையில் கதைகளையும் கற்பனை பண்ணியிருக்கிறார்கள் அன்றைய தமிழர்கள். ஒரு நாமம், ஓர் உருவம், ஒன்றுமில்லாத இறைவன் - இப்படித்தான் ஆயிரம் திருநாமங்களுடனும், இன்னும் எண்ணற்ற உருவங்களுடனும் உருவாகியிருக்கிறான் - மனிதனது கற்பனையிலே.

இப்படி கற்பனை செய்த தையெல்லாம், கல்லிலும், செம்பிலும் வடித்தெடுத்து இருக்கிறார்கள் நம் நாட்டு சிற்பிகள். அப்படி அவர்கள் உருவாக்கிய சிற்ப வடிவங்களே இன்று நமது தமிழ்நாட்டு கோவில்களில் எல்லாம் நிறைந்திருக்கின்றன.

கல்கி',யில்

தொ.மு.பாஸ்கர தொண்டமான்

துவிஜதர்களுக்கு - இரு பிறப்பாளர்களுக்குத் தெய்வம் அக்னியில்,

முனிவர்களுக்குத் தெய்வம் இருதயத்தில்,

புத்தி குறைந்தவர்களுக்குத் தெய்வம் சிலையில்,

சம பார்வை உள்ளவர்களுக்கு எங்கும் தெய்வம் என்கிறது.

உத்திர கீதை

இப்பொழுது கோவில்களில் செதுக்கி அடித்து வைக்கப்பட்டுள்ள கோவில் சிலைகள் எல்லாம் பிற்காலக் கற்பனையே!

மேலே எடுத்துக்காட்டப் பட்டுள்ள உத்தர கீதையில் கண்டுள்ள ஒரு கருத்து மிகவும் முக்கியமானது. புத்தி குறைந்தவர்களுக்குத் தெய்வம் சிலை என்பது அடிக்கோடிட்டுக் கவனிக்கத்தக்கதாகும்.

கொஞ்சம் நிதானமாக சிந்தித்தால், தந்தை பெரியார் கூறும் கருத்தில் உள்ள நியாயம் துல்லியமாகப் புரியும்.

கடவுளுக்கு இலக்கணம் என்று எதைச் சொல்கிறார்கள்? அரூபி - அதாவது உருவமற்றவர் என்றும், கண்ணுக்குத் தெரியாதவர்; அய்ம்புலனுக்கும் சிக்காதவர் என்றும் ஒரு பக்கம் சொல்லிக் கொண்டு, இன்னொரு பக்கத்தில், நாலு கை, மூன்று தலை, துதிக்கை என்று கற்பனையாக இயற்கைக்கு முரணாக உருவம் அமைத்தது முரண்பாடு அல்லவா?

அதைவிட அசிங்கம் கடவுளுக்குப் பெண்டாட்டி, வைப்பாட்டி, பிள்ளைக் குட்டிகள் என்பது எல்லாம் அருவருப்பானதாகவும், அறிவுக்கு ஒவ்வாததாகவும் தெரியவில்லையா?

அதைவிட ஆபாசம் - கடவுள் கற்பழித்தது என்று கூறுவது - தாங்கள் நம்பும் கடவுளையே அவமதிப்பது ஆகாதா?

கடவுள்பற்றி தந்தை பெரியார் என்ன கூறுகிறார்?

‘‘விறகில் தீயினன்! பாலில் படுநெய்போல் மறைய நின்றுளான்'' என்று திருநாவுக்கரசு பாடுகிறார். இவ்வடிகளின் கருத்து என்ன? விறகினுள் தீயைப் போலவும், பாலினுள் நெய்யைப் போலவும் இறைவன் உள்ளான் என்பது ஆகிறது.

விறகில் தீயை யாரும் வைக்கவில்லை அல்லது உண்டாக்கவில்லை. பாலினுள் நெய்யை யாரும் வைக்கவில்லை. யாரும் வைக்காமல் இயல்பாகவே இருக்கின்றது. இவற்றைப் போல் இறைவனும் யாரும் கற்பிக்காமல் இயல்பாக உள்ளான் என்பது கருத்து. உண்மை இப்படி இருக்க நான் கடவுளைக் கற்பித்தவனை முட்டாள் என்றால், நீ என்ன செய்யவேண்டும்? நம்முடைய கடவுள் கற்பிக்கப்பட்டதல்ல - ஆகவே, பெரியார் சொல்லுவதற்கும், நமக்கும் சம்பந்தமில்லை என்று அல்லவா கூறவேண்டும்?

அவ்வாறு இல்லாமல் கடவுளைக் கற்பித்தவனை அறிவாளி என்று சொன்னால், நீ எவ்வளவு மடையனாக இருக்கிறாய்?'' என்ற தந்தை பெரியாரின் கேள்விக்குப் பதில் உண்டா?

 - மயிலாடன்

No comments:

Post a Comment