தருமபுரியில் 'நீட்' தேர்வு ஒழிக்கப்பட வேண்டும் ஏன்? எதற்காக?" கருத்தரங்கம் 'கற்போம் பெரியாரியம்', "ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன்குதிரை" நூல்கள் அறிமுக விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 26, 2021

தருமபுரியில் 'நீட்' தேர்வு ஒழிக்கப்பட வேண்டும் ஏன்? எதற்காக?" கருத்தரங்கம் 'கற்போம் பெரியாரியம்', "ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன்குதிரை" நூல்கள் அறிமுக விழா

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரையாற்றினார்

தருமபுரி அக். 26 தருமபுரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் 'நீட்' தேர்வு ஒழிக்கப் படவேண்டும் ஏன்? எதற்காக?' கருத்தரங்கம் மற்றும் 'கற்போம் பெரியாரியம்' 'ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை' நூல்கள் அறிமுகவிழா 24-10-2021 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி அளவில் தருமபுரி அதிய மான் அரண்மனை அவ்வையார் அரங்கத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்காக வருகை தந்த திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை  அதியமான் அரண்மனை முன் தருமபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், திருப்பத்தூர், மாவட்ட தோழர்கள் ஒலி முழக்கமிட்டு வரவேற்றனர். தருமபுரி மாவட்ட கழகம் சார்பில் மாவட்ட தலைவர் வீ.சிவாஜி, மறைந்த கழகப் புரவலர் கே.ஆர்.சின்னராஜ் அவர்களின் மகன் சி.ஆசைத்தம்பி, மாநில மாணவர் கழக துணை செயலாளர் .யாழ் திலீபன் ஆகியோர் சால்வை அணிவித்து வரவேற்றனர்.

கருத்தரங்கம் - நூல் அறிமுக விழா!

'நீட்' தேர்வு ஒழிக்கப்படவேண்டும் ஏன் எதற்காக?' என்ற தலைப்பில் கருத்தரங்கமும், 'கற்போம் பெரியாரியம்', 'ஆர்.எஸ்.எஸ் .என்னும் டிரோஜன் குதிரை' நூல்கள் அறிமுக விழா அதியமான் அரண்மனையில் அவ்வையார் அரங்கத்தில் நடைபெற்றது. மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வீ.சிவாஜி தலைமையேற்றார்.

மாவட்ட செயலாளர் மு.பரமசிவம் வரவேற்புரையாற்றினார். மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, தர்மபுரி மண்டல தலைவர் .தமிழ்ச்செல்வன், மண்டல செயலாளர் பழ.பிரபு, பொதுக்குழு உறுப்பினர்கள் .தீர்த்தகிரி,.கதிர், துணைத் தலைவர் புலவர் இரா. வேட்டராயன், மாநில மாணவர் கழக துணைச் செயலாளர் .யாழ்திலிபன், மாவட்ட ஆசிரியரணி தலைவர் கதிர் செந்தில், மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் மாரி.கருணாநிதி, இளைஞரணி தலைவர் தீ.எங்கல்ஸ், மாணவர் கழக தலைவர் .சமரசம், நகர தலைவர் கரு.பாலன், விடு தலை வாசகர் வட்டத் தலைவர் .சின்னராஜ், செயலாளர் சுதாமணி, கடத்தூர் வாசகர் வட்டத் தலைவர்

கோ .தனசேகரன், செய லாளர் .நடராஜன், மண்டல மாணவர் கழக செயலாளர் மா.செல்லதுரை, மண்டல இளை ஞர் அணி செயலாளர் வண்டி.ஆறுமுகம், மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் சி.காமராஜ், மாவட்ட துணைச் செயலாளர்

கு.சரவணன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர்

கே.ஆர்.குமார், ஆசிரியரணி செயலாளர் அண்ணாதுரை, ஆசிரியரணி அமைப்பாளர் மு.பிரபாகரன் ,காமலாபுரம்

இரா.ராஜா, ஆசிரியரணி அமைப்பாளர் தீ. சிவாஜி, ஆகியோர் முன்னிலையேற்றினர் .

மாநில திராவிடர் கழக அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் தொடக்க உரை யாற்றினார். திராவிடர் கழக பொதுச்செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் ஆர்.எஸ்.எஸ். என்னும் குதிரை என்னும் தலைப் பில் நூலறிமுக உரையாற்றினார்.

தமிழ் வளர்ச்சித்துறை  இயக்குநர் முனை வர்.  மு.ராஜேந்திரன்கற்போம் பெரியாரியம்எனும் தலைப்பில் நூல் அறிமுக உரை யாற்றினார்.

திராவிடர் கழக மாநில அமைப்புச் செய லாளர் ஊமை.ஜெயராமன் இணைப்புரை யாற்றி தொகுத்து வழங்கினார்.

நூல் வெளியீடு

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் எழுதியகற்போம் பெரியாரியம்நூலை தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளர் பி.என்.பி. இன்பசேகரன், ‘திராவிடம் வெல்லும்என்னும் நூலை மேனாள் உயர்கல்வித்துறை அமைச்சர் பி.பழனியப்பன், ‘மத்திய பாஜக ஆட்சியில் பறிக்கப்படும் சமூக நீதிஎன்னும் நூலை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் கே .ஜி .எஸ் .கோவேந்தன், ‘ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரைஎன்னும் நூலை திராவிடர் கழக பொதுச் செய

லாளர் துரை. சந்திரசேகரன் ஆகியோர் வெளியிட்டு உரை யாற்றினர்.

வெளியிடப்பட்ட நூல்களை திராவிட முன்னேற்றக் கழக ஆதி திராவிட நல குழு துணைச் செயலாளர் அரூர் சா.இராஜேந்திரன்,  தர்மபுரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் தடங்கம் சுப்பிரமணி  சார்பாக அவரது மகன் இளையசங்கர், .அய்.டி.யு.சி. மாவட்ட பொதுச் செயலாளர் கே. மணி, தமிழக வாழ்வு ரிமைக் கட்சி மாநில துணை பொதுச்செயலாளர் தவமணி, பாலக்கோடு பகுத்தறிவாளர் கழக தலைவர் ஜீவாகிருஷ்ணன், மாநில பகுத்தறிவாளர் கழகத்  துணைத் தலைவர் அண்ணா. சரவணன், நல்லம்பள்ளி ஒன்றிய செயலாளர் சண்முகம், தினமுரசு கோபால், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க பொறுப்பாளர் நாகை பாலு,  மற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திராவிடர் கழகத் தோழர்களும், பங்கேற்ற கட்சி நிர்வாகிகளும், சமூக ஆர்வலர்களும் புத்தகங்களைப் பெற்றுக் கொண்டனர்.                                                            ‌‌      

இயக்கத்தில் இணைந்த மாணவர்கள்!

திராவிடர் மாணவர் கழக மாநிலத் துணைச் செயலாளர் .யாழ்திலீபன், மாவட்ட மாணவர் கழக தலைவர் .சமரசம், செய லாளர் .பிரதாப், அமைப்பாளர் பூபதி ராஜா, கடத்தூர் ஒன்றிய மாணவர் கழக தலைவர் பெரியார் ஆகியோர் முயற்சியால் கிராமங் களில் மாணவர் சந்திப்பு கூட்டங்களை நடத்தியதின் வழியாக வாசிகவுண்டனூர் கிராமத்தில்  பூபதி ராஜா தலைமையில் விஜய அரசு, சண்முகம், கார்த்திக், வெங்கடேசன், ஆகியோரும், வெங்கட சமுத்திரம் கிராமத்தில்  கழக அமைப்பாளர் சாய் குமார் தலைமையில் நாச்சியப்பன், முகிலன், சிவா, ஆகியோரும் சிக்கம்பட்டி   மாணவர் கழக அமைப்பாளர் சிறீதரன் தலைமையில் சசிகுமார், சதீஷ், மனோஜ், சஞ்சய், முகுந்தன், வள்ளுவன், சதீஷ்குமார் ஆகியோரும், வெதரம் பட்டியில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆனந் தன் தலைமையில் நிதீஷ்குமார், ராகுல், திருப் பதி, சுந்தர்ராஜன் ஆகியோரும், சிக்கம் பட்டியில் மாவட்ட இளைஞரணி செயலாளர் சிறீதரன் தலைமையில் பிரகாசம், கோகுல், ஆதவன், தமிழ்வாணன் ஆகியோரும், மிட்டாரெட்டி அள்ளி  கழக அமைப்பாளர் திராவிடன் தலைமையில் சூர்யா, சஞ்சய், ராஜேஷ், சதீஷ், பிரபு உட்பட 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் அறிமுகப் படுத்திக்கொண்டு இயக்கத்தில் இணைந்தனர்.

மற்றும் வேப்பிலைப்பட்டி, தாதனூர்புதூர், பாப்பிரெட்டிப் பட்டி, பறையபட்டி ஆகிய கிராமங்களிலிருந்து ஆசிரியர் பங்கேற்ற நீட் எதிர்ப்பு கருத்தரங்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள திரளான மாணவர்கள் வருகை தந்தனர்.

நிகழ்ச்சியின் சிறப்பு

'கற்போம் பெரியாரியம்', 'ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை', 'திராவிடம் வெல்லும்', 'மத்திய பாஜக ஆட்சியில் பறிக்கப்படும் உரிமைகள்', ஆகிய நூல்கள் அடங்கிய 300 தொகுப்பு நூல்களை விற்பனை செய்யப்பட்டது அதற்கான தொகை தலைமை நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. பொதுக் குழு உறுப்பினர் .தீர்த்தகிரி  27 விடுதலை சந்தாக்கள்,  மண்டல திராவிடர் கழகத் தலைவர் .தமிழ்ச்செல்வன் ஒரு விடுதலை, உண்மை சந்தாக்களையும் ஆசிரியரிடம் வழங்கினர். பெரியார் பெருந்தொண்டர் சுயமரியாதைச் சுடரொளி அன்புமணி அவர்களின் குடும்பத்தின் சார்பில் பெரியார் உலகத்திற்கு ரூபாய் அய்ந்தாயிரம் நிதியை மாவட்ட கழக பொறுப்பாளர்கள் தமிழர் தலைவரிடம் வழங்கினார்கள்.   திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் மாவட்டத் தலைவர் வீ.சிவாஜி, மாவட்ட செயலாளர்

மூ.பரமசிவம் ஆகியோர் இணைந்து சிறப்பு செய்தனர்.

மேனாள் உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன், தருமபுரி மேற்கு மாவட்ட திமுக செயலாளர் பி.என்.பி. இன்பசேகரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் கோவேந்தன், பாலக் கோடு ஒன்றிய பகுத்தறிவாளர் கழக தலைவர் ஜீவா கிருஷ்ணன், அரூர் பகுத்தறிவாளர் கழகத் தலைவர் சா.ராஜேந்திரன், தமிழ் வளர்ச்சித்துறை மேனாள் இயக்குனர் முனைவர்  மு.இராஜேந்திரன், சிந்தல் பாடி மேனாள் ஊராட்சித் தலைவர் கோ.குபேந் திரன், தாளநத்தம்   சொ.பாண்டியன், ஆகி யோர் ஆசிரி யருக்கு சால்வையணிவித்து சிறப்பு செய்தனர்.

இயக்கத்தின் வளர்ச்சிக்காக சிறப்பாக பணியாற்றிய கழகப் பொறுப்பாளர்களுக்கும் திராவிடர் மாணவர் கழகப் பொறுப்பாளர்களுக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து கட்சி பொறுப்பாளர்களுக்கும் சிறப்பு அழைப் பாளர்கள்  நூல்களை வெளியிட்ட, பெற்றுக்கொண்டவர்களுக்கும்  தமிழர் தலைவர் ஆசிரியர் கி வீரமணி அவர்கள் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார்கள்.                

பங்கேற்றோர்

நிகழ்ச்சியில் மாநில திராவிடர் மாணவர் கழக அமைப்பாளர் செந்தூரப் பாண்டியன், நல்லம்பள்ளி ஒன்றிய திமுகசெயலாளர் சண்முகம், தேசிய மக்கள் கட்சி நிறுவனர் இனமுரசு கோபால் அதிமுக பிரமுகர் நாகை நடராசன், கடத்தூர் ஒன்றிய செயலாளர்  தலைவர் தனசேகரன், செயலாளர் இளங்கோ பாப்பிரெட்டிப்பட்டி செங்கல் மாரி, ஒன்றிய பகுத்தறிவாளர் கழக தலைவர் கு.தங்கராஜ், மாவட்ட  இளைஞரணி அமைப்பாளர் ஆனந்தன், விடுதலை வாசகர்சொ. பாண்டியன், மாயவன், கழக வழக்குரைஞர் பீம.தமிழ் பிரபாகரன், ஆசிரியரணி  இர.கிருஷ்ண மூர்த்தி, மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் பெ.கோவிந்தராஜ், பாப்பிரெட்டிப் பட்டி வினோபாஜி, ஆசிரியர் சுந்தரம், கடை மடை அழகேசன், காமலாபுரம்  ராமசாமி, தர்மபுரி ஒன்றிய தலைவர் .துரைசாமி, செயலாளர் மா.சென்ராயன், ஆசிரியர் துரை.கருணாகரன், வினோ வடிவேல், ஆசிரியர் பழனி, கொண்டகரஅள்ளி பிரகாசம், மாத.செந்தில், பாப்பிரெட்டிப் பட்டி  ஆசிரியர் திராவிடன், அன்பரசன்,  கடைமடை கோவிந்தராஜ், சங்கரன், மகளிர் அணி நளினி கதிர், செல்வி சிவாஜி, சோபியா, மேனாள் மாவட்ட தலைவர் மனோகரன், நவலை பாரதிராஜா, கார்த்திக், கிராம அலுவலர் செல்வி, கிருஷ்ணகிரி மாவட்ட சார்பில் மாவட்ட தலைவர் அறிவரசன், மாவட்ட செயலாளர்கள் .மாணிக்கம், மாவட்ட அமைப்பாளர் கதிரவன், ஓசூர்  பொதுக்குழு உறுப்பினர் செல்வம், மாவட்ட மகளிரணி தலைவர் செல்வி, கிருஷ்ணகிரி நகர தலைவர் தங்கராஜ், ஊத்தங்கரை ஒன்றிய தலைவர் கா பொன்முடி ,ஒன்றிய செயலாளர் சிவராஜ், பொதுக்குழு உறுப்பினர் ஜான்சிராணி ,அப்பாசாமி, மேனாள் மண்டல செயலாளர் கோ.திராவிடமணி, காவேரிப்பட்டணம் ஒன்றிய பொறுப்பாளர் சீனிவாசன், மாவட்ட மாணவர் கழக அமைப்பாளர் நிலவன்,   வேப் பிலைப்பட்டி ஹரிஹரன்,, மற்றும் பகுதியி லிருந்து வந்த பெரும்பாலான கழகத் தோழர்கள் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இறுதியாக மாவட்ட திராவிடர் கழக அமைப்பாளர் இரா. சேட்டு நன்றி கூறினார்.

தொகுப்பு:

வேப்பிலைப்பட்டி தமிழ்ச்செல்வன் 

No comments:

Post a Comment