பொறியியல் படித்தவருக்கு வேலை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 27, 2021

பொறியியல் படித்தவருக்கு வேலை

பொதுத்துறை நிறுவனமான கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் 'அப்ரென்டிஸ்' பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட் டுள்ளது.

காலியிடம்: எக்சிகியூட்டிவ் டிரெய்னி பிரிவில் சிவில் 2, எலக்ட்ரிக்கல் 19, எலக்ட்ரானிக்ஸ் 2, மெக்கானிக்கல் 37, நாவல் ஆர்க்கிடெக்சர் 6, அய்.டி., 2, எச்.ஆர்., 2 உட்பட மொத்தம் 70 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: தொடர்புடைய பிரிவில் குறைந்தது 65 சதவீத மதிப்பெண்ணுடன் பி.., முடித்திருக்க வேண்டும்.

வயது: 27.10.2021 அடிப்படையில் 27 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

பயிற்சி: ஓராண்டு பயிற்சிக்கு பின் அசிஸ்டென்ட் மேனேஜராக பணி நியமனம் செய்யப்படுவர். பயிற்சியின் போது மாதம் ரூ. 50 ஆயிரம், பின் மாதம் ரூ. 1,12,181 வழங்கப்படும்.

தேர்ச்சி முறை: ஆன்லைன் எழுத்துத்தேர்வு, குழு விவாதம், நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 750. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை. கடைசிநாள்: 27.11.2021

விபரங்களுக்கு: https://cochinshipyard.in/uploads/career/a2dd620c54c34afc297004f14a357b72.pdf

No comments:

Post a Comment