நவ.1 முதல் முன்பதிவில்லா ரயில் பெட்டிகள் மீண்டும் இயக்கம் - தெற்கு ரயில்வே - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 27, 2021

நவ.1 முதல் முன்பதிவில்லா ரயில் பெட்டிகள் மீண்டும் இயக்கம் - தெற்கு ரயில்வே

சென்னை, அக்.27 நவம்பர் 1ஆம் தேதி முதல் பழைய முறைப்படி முன்பதிவில்லா ரயில்பெட்டிகளில் முன்

பதிவின்றி பயணிக்கலாம் என்று தெற்கு ரயில்வே

அறிவித்துள்ளது.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக ரயில்களில் பயணிக்க முன்பதிவு அவசியமாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கரோனாவுக்கு பின்னர் முன்பதிவில்லா 2ஆம் வகுப்பு பெட்டிகளில் பயணிக்கவும் முன்பதிவு அவசியமாக்கப் பட்டுள்ளது. இதனால், அவசர வேலையாக ரெயிலில் வெளியூர்களுக்கு செல்லும் பயணிகள் சற்று சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.  

இந்நிலையில், நவம்பர் 1ஆம் தேதி முதல் முன்பதிவில்லா ரயில் பெட்டிகள் மீண்டும் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 23 ரயில்களில் முன்பதிவில்லா 2ஆம் வகுப்பு ரயில் பெட்டிகள் சேர்க்கப் பட்டுள்ளது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. முன்பதிவில்லா ரயில்பெட்டிகளில் பழைய முறைப்படி முன்பதிவின்றி பயணிக்கலாம். பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு நவம்பர் 1ஆம் தேதி முதல் முன்பதி வில்லா ரயில் பெட்டிகள் மீண்டும் இயக்கப்பட உள்ளன.

கோவை - நாகர்கோவில், திருச்சி - திருவனந்தபுரம் இடையேயான ரயில்களிலும் முன்பதிவில்லா ரயில் பெட்டிகள் மீண்டும் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்:

பெற்றோரின் வயது வரம்பு உயர்வு

தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை, அக்.27 பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் பெற்றோரின் வயது வரம்பை உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது

சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் முதன்மைச் செயலாளர் ஷம்பு கல்லோலிகர் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:- சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் அமைச்சர் கடந்த செப்டம்பர் 1ஆம் தேதியன்று சட்டப் பேரவையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், முதல்-அமைச் சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் நிர்ண யிக்கப்பட்ட தகுதிகளுள் ஒன்றான, பெண் குழந்தைகள் உள்ள பெற்றோரில் ஒருவர் 35 வயதிற்குள் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துகொண்டவராக இருக்க வேண்டும் என்பதில் உள்ள அந்த வயது வரம்பு 35இல் இருந்து 40 ஆக உயர்த்தப்படுகிறது என்று கூறப் பட்டுள்ளது.

இதுதொடர்பாக அரசுக்கு சமூகநல இயக்குநர் கடிதம் எழுதியிருந்தார். இதை அரசு கவனமாக பரிசீலனை செய்து, வயது வரம்பை 35இல் இருந்து 40 ஆக உயர்த்தி அரசு ஆணையிடுகிறது. இந்த திட்டத்திற்காக நடப்பாண்டில் செய்யப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடு ரூ.100 கோடிக்குள் செலவீனம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

No comments:

Post a Comment