குமரி மீனவர்களின் விசைப்படகுமீது வெளிநாட்டு சரக்கு கப்பல் மோதி விபத்து கடலோர காவல்படை வழக்குப்பதிவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 25, 2021

குமரி மீனவர்களின் விசைப்படகுமீது வெளிநாட்டு சரக்கு கப்பல் மோதி விபத்து கடலோர காவல்படை வழக்குப்பதிவு

குளச்சல்,அக்.25- நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, குமரி மாவட்ட மீனவர்களின் விசைப்படகு மீது மோதிய வெளிநாட்டு சரக்கு கப்பல் மீது, குளச்சல் கடலோர  காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். குமரி மாவட்டம் குளச்சலை  சேர்ந்த மீனவர்கள் 17 பேர், கடந்த இரு நாட்களுக்கு முன் குளச்சல் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். இவர்களது விசைப்படகு, சுமார் 19 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, சிங்கப்பூரில் இருந்து மும்பைக்கு சென்ற சரக்கு கப்பல், மோதியது. இதில் விசைப்படகின் முன் பகுதியில் சேதம் ஏற்பட்டதுடன், படகில் இருந்த மீனவர்கள் சிலர் தூக்கி வீசப்பட்டு கடலில் விழுந்தனர்.

சரக்கு கப்பல் கவனக் குறைவாக, அஜாக்கிரதையாக வந்து மோதியதே விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது. இந்த சரக்கு கப்பல், பனாமா நாட்டில் பதிவு செய்யப்பட்ட நேவியாஸ் வீனஸ் என்பது தெரிய வந்தது. இதில் பலத்த காயம் அடைந்த மேலமணக்குடியை சேர்ந்த அருள்ராஜ் மற்றும் குளச்சலை சேர்ந்த ஜான் ஆகிய இருவரும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் டனர். விபத்துக்குள்ளான விசைப்பட கில் இருந்த மற்ற 15 மீனவர்களில் ஒரு சிலருக்கு உடல் நிலை பாதிக்கப்பட் டதால் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து குளச்சல் கடலோர காவல் நிலைய காவல்துறையினர், பனாமா நாட்டு சரக்கு கப்பல் ஓட்டுநர் மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவு 280, 337 பிரி வுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள் ளனர். பாதிக்கப்பட்ட மீனவர்கள் மற் றும் விசைப்படகிற்கு உரிய இழப்பீடு வழங்க கோரிக்கை எழுந்துள்ளது.

No comments:

Post a Comment