வேரோடு பிடுங்கப்பட்ட பனை மரங்கள் மீண்டும் நடப்பட்டன - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 25, 2021

வேரோடு பிடுங்கப்பட்ட பனை மரங்கள் மீண்டும் நடப்பட்டன

செய்யாறு,அக்.25- செய்யாறு அருகே தனியார் நிலத்தில் வேரோடு பிடுங் கப்பட்ட பனை மரங்கள் வருவாய்த் துறை கோட்டாட்சியரின் அதிரடி நடவடிக்கையால் மீண்டும் நடப் பட்டுள்ளன.  பனைமரம் தமிழ்நாட்டின் மாநில மரமாக அங்கீகரிக்கப்பட்டு போற்றப்பட்டு வருகிறது. தமிழ்நாட் டில் கடந்த சில ஆண்டுகளாக பனை மரங்கள் வளரும் பரப்பளவு குறைந்து வருகிறது. அத னால் பனைமரங்களை வெட் டக்கூடாது. பனையைக் காக்க வேண்டும் என சுற்றுச் சூழல் ஆர்வ லர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி தமிழ் நாடு அரசு வெளியிட்ட வேளாண் பட்ஜெட்டில், பனை மரங்களை வெட்ட மாவட்ட ஆட்சியர் அனுமதி பெறவேண்டும் என தெரி விக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருவண் ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே சுமங்கலி சாலையில் நெடும்பிறை கிராமம் அருகே  கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனியார் நிலத்தில் சாலையோரம் இருந்த 10க்கும் மேற்பட்ட பனை மரங்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் வேரோடு பிடுங்கப்பட்டுள்ளது.

வேரோடு பிடுங்கி எறியப்பட்ட பனை மரங்களை அதே இடத்தில் நட வருவாய்த்துறை கோட்டாட்சியர்   விஜயராஜ் உத்தரவிட்டார். இதை யடுத்து பிடுங்கி எறியப்பட்ட பனை மரங்களில் சுமார் 20 அடி உயரமுள்ள நான்கு மரங்கள் 23.10.2021 அன்று அதே பகுதியில் மீண்டும் நடப்பட்டது. மற்ற மரங்கள் வேர்கள் பாதிக்கப்பட்ட தோடு, பட்டுப் போனதால் நடப்படவில்லை.

No comments:

Post a Comment