மகாராட்டிரா மாநில அமைச்சர் சகன் புஜ்பாலுடன் பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு நிர்வாகிகள் சந்திப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 25, 2021

மகாராட்டிரா மாநில அமைச்சர் சகன் புஜ்பாலுடன் பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு நிர்வாகிகள் சந்திப்பு

மும்பை, அக்.25 மகாராட்டிரா மாநில உணவு அமைச் சரும், மகாத்மா பூலே பரிசத் தலைவருமான சகன் புஜ்பால் அவர்களை 21.10.2021 அன்று அகில இந்திய பிற் படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கோ.கருணாநிதி, செயலாளர் பிரதீப் தோப்லே (ஏர் இந்தியா), விவேக் குமார் (யூனியன் வங்கி, மும்பை) ஆகியோர் சந்தித்து, . 1. ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும், 2. இட ஒதுக்கீட்டில் 50% உச்ச வரம்பை நீக்குதல் மற்றும் 3. கிரீமி லேயரை அகற்றுதல் ஆகிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர். கோரிக்கைகளை ஒன்றிய அரசின் நடவடிக்கைக்கு அரசின் சார்பில் எடுத் துச் செல்வதாக அமைச்சர் உறுதியளித்தார்.

அமெரிக்காவை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் பெரியார் பன்னாட்டு அமைப்பின் சார்பில் 2014-இல் சமூக நீதிக்கான கி.வீரமணி விருது அளிக்கப்பட்டதை நினைவு கூர்ந்தார். தமிழர் தலைவரின் நலன் குறித்தும் செயல்பாடுகள் குறித்தும் வின வினார். தமிழர் தலைவர் அமைச்சரின் நலன் குறித்து விசாரித்திடச் சொன்னதையும் மகிழ் வுடன் ஏற்றுக் கொண்டார்.

தமிழர் தலைவரின் முயற்சியால் தமிழ் நாடு அரசு இயற்றிய ’69 சதவீத இட ஒதுக்கீடு சட்டம்குறித்த ஆங்கில நூல் அமைச்சரிடம் அளிக்கப்பட்டது. இதுபோன்று ஒரு சட்டம் மகாராட்டிராவிலும் இயற்றப்பட வேண்டும் என்ற வேண்டுகோளையும் ஏற்றுக் கொண் டார்.

தமிழ்நாட்டில் நடைபெறும் சமூக நீதி தொடர்பு நிகழ்வுகளில் கலந்து கொள்ளவும் அழைப்பு விடுக்கப்பட்டது.

இவ்வாறு அகில இந்திய பிற்படுத்தப் பட்டோர் கூட்டமைப்பின் பொதுச் செய லாளர் கோ.கருணாநிதி குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment