400 செட் புத்தகங்கள் விற்பனை செய்து சாதனை படைத்த அரியலூர் மாவட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 22, 2021

400 செட் புத்தகங்கள் விற்பனை செய்து சாதனை படைத்த அரியலூர் மாவட்டம்

 ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள 'நீட்' தேர்வு என்பது நவீன குலக்கல்விதான்!

இப்போது ஹிந்தி பேசும் மாநிலங்களிலும் பெரியாரைத் தேடுகிறார்கள்!

செந்துறை, அக்.22, நீட் தேர்வு ஒழிக்கப் படவேண்டும் ஏன்? எதற்காக? கருத்தரங்கம் அரியலூர் மாவட்டம் செந்துறையில் நடை பெற்றது. அனைத்துக் கட்சித்தலைவர்களும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை ஆற்றினார்.

நீட் ஒழிக்கப்பட வேண்டும் ஏன்? எதற்காக? பிரச்சாரப் பயணத்தின் நிகழ்ச்சி செந்துறையில் உள்ள, அருணா - பார்வதி திருமண மண்டபத் தில், நேற்று (21-10-2021) மாலை 5 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மாவட்டத் தலைவர் விடுதலை நீலமேகம் நிகழ்வுக்கு தலைமை வகிக்க, மாவட்டச் செய லாளர் சிந்தனைச் செல்வன் தொடக்க உரை வழங்கி சிறப்பித்தார்.

திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன். மண்டச் செய லாளர் மணிவண்ணன், கோவிந்தராஜன், தி.மு.. மாவட்டச் செயலாளரும், தமிழ்நாடு பிற்படுத்தப் பட்டோர் நலத்துறை அமைச்சருமான எஸ்.எஸ். சிவசங்கர், தி.மு.. கொள்கை பரப்புச் செயலாளர் முனைவர் இரா.தி.சபாபதிமோகன், ஜெயங் கொண்டம் தி.மு.. சட்டமன்ற உறுப்பினர் .சொ..கண்ணன், தி.மு.. சட்ட திட்டக்குழு மாநில உறுப்பினர் சுபா. சந்திரசேகரன், தி.மு.. கொள்கை பரப்புத் துணைச் செயலாளர் ..பெருநற்கிள்ளி ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர்.

அனைவருமே பெரியார் கொள்கைகளின் தேவையையும், திராவிடர் கழகத்தின் தேவை குறித்தும், தமிழர் தலைவர் ஆசிரியரின் முக்கியத் துவம் குறித்தும் கட்சி பேதமின்றி பேசினர்.

தொடக்கத்தில் புத்தக அறிமுக விழா நடைபெற்றது. ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை எனும் புத்தகத்தை, திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திர சேகரன் அறிமுகப்படுத்தி பேசினார்.

அவரைத் தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் உரையாற்றினார்.

தொடர்ந்து, முனைவர் இரா.தி.சபாபதி மோகன் கற்போம் பெரியாரியம் எனும் நூலை அறிமுகப்படுத்தி பேசினார்.

தொடர்ந்து அனைத்து அமைப்புகளையும் சேர்ந்த பொறுப்பாளர்கள், பொதுமக்கள், திராவிடர் கழகத் தோழர்கள் ஒவ்வொருவராக வரிசையாக வந்து தமிழர் தலைவரிடம் உரிய தொகை கொடுத்து, புத்தகங்களைப் பெற்றுக் கொண்டனர். பின்னர்  அனைத்து அமைப்பு களைச் சேர்ந்த தோழர்கள் வரிசையாக மேடைக்கு வந்திருந்து தமிழர் தலைவருக்கும், அமைச்சருக்கும் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தனர்.

இறுதியாக தமிழர் தலைவர் உரையாற்றினார். மேடையிலிருந்த அனைவருமே திராவிடர் கழகப்பாசறையில் உருவான கருவிகள் என்பதை நினைவூட்டி, அவர்கள் ஒவ்வொரு வரின் சிறப்புகளையும் தனித்தனியாக, சென்ற தலைமுறையினரின் செயல்களை உற்சாகத் துடன் பட்டியலிட்டார். மேடையில் இருப்பவர் களெல்லாம் திராவிடர் இயக்கத்தின் விழுதுகள்; அந்த விழுதுகள்தான் இப்போது வேர்களைத் தாங்குகிறது என்று பெருமித்தோடு சுட்டிக் காட்டினார். பொதுச்செயலாளர் துரை.சந்திர சேகரன், இராமகோபாலனுக்கு கலைஞர் கீதையின் மறுபக்கம் புத்தகத்தை கொடுத்ததை நினைவூட்டி பேசியதைச் சுட்டிக்காட்டி, “இது வீரமணி எழுதியது. இதை நன்றாகப் படித்துப் பார்த்து, ஏதாவது தவறு இருந்தால் சொல்லுங்கள். திருத்தச் சொல்வோம்என்று கலைஞர், இராமகோபாலனிடம் சொன்னதை, தன்னிடம் பகிர்ந்து கொண்டதை குறிப்பிட்டார். இராம.கோபாலன் தனது வாழ்நாளில் மறுப்பு எழுதவேயில்லை என்பதையும், அதற்குக் காரணமாக, திராவிடர் இயக்கத்தவர்  மறுக்க முடியாத ஆதாரங்களின் அடிப்படையில் எழுதுவர் என்றும், அப்படித்தான் பெரியார் நம்மை ஆளாக்கியிருக்கிறார். அதனால்தான்உள்ளத்தால் பொய்யாது ஒழுகின், உலகத்தார் உள்ளத்துளெல்லாம் உளன்என்று திருக் குறளைச் சொல்லி பெரியாரை உருவகப்படுத்திக் காட்டினார்.

பெரியார் பிறந்திருக்காவிட்டால் என்று ஒரு கேள்வியை எல்லோரும் உங்களுக்குள் கேட்டுப்பாருங்கள் என்று சொல்லிவிட்டு, பெற்ற உரிமைகள் எப்படி நீட் தேர்வு மூலம் பறி போகிறது என்பதை, நீட் தேர்வின் தோற்று வாயான ஊழல்பேர்வழியான் கேத்தன் தேசாய் தொடங்கி, காங்கிரஸ் ஆட்சியில், நீட் தேர்வு கூடாது என்று தீர்ப்பு வந்தது, பா.. ஆட்சியில் தவே தலைமையில் கொடுக்கப்பட்ட தீர்ப்பு என்பதை எடுத்துரைத்து, பா... தான் திட்டமிட்டு, கொண்டு வந்தது என்று நிறுவினார். தி.மு.. நிறைவேற்றியுள்ள நீட் எதிர்ப்பு மசோதாவின் சிறப்புகள் என்ன? மேனாள் நீதிபதி .கே.ராஜன் தலைமையிலான குழு கொடுத்த அறிக்கை, அதனடிப்படையில் தமிழ்நாடு அரசு மேற்கொண்டுவரும் முயற்சிகள் போன்றவற்றை எடுத்துரைத்து, 30 ஆண்டுகள் போராடி நுழைவுத் தேர்வை ஒழித்துக் கட்டிய வரலாறு நமக்குண்டு. ஆகவே, நிச்சயம் மக்கள் கிளர்ச் சியின் மூலம் நாம் இதில் வெற்றி பெறுவது உறுதி என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார். இந்த சுற்றுப்பயணத்தில் செந் துறை யில் அதிக புத்தகத் தொகுப்பு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சி பெரியார் வலைக்காட்சி சார்பில் நேரலை செய்யப்பட்டது, இப்பணிகளை உடுமலை வடிவேல், வேணுகோபால் ஆகியோர் மேற்கொண்டனர். அரங்கு நிறையுமளவுக்கு அனைத்து அமைப்பு களையும் சேர்ந்த தோழர்களும் பொது மக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment