சென்னை காவல் ஆணையரகம் 3 ஆகப் பிரிப்பு தாம்பரம், ஆவடி ஆணையரகங்களின் காவல் நிலைய பட்டியல் விவரம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 12, 2021

சென்னை காவல் ஆணையரகம் 3 ஆகப் பிரிப்பு தாம்பரம், ஆவடி ஆணையரகங்களின் காவல் நிலைய பட்டியல் விவரம்

சென்னை, ஆக. 12- சென்னை காவல் ஆணையரகம் 3-ஆக பிரிக்கப் பட்டுள்ளது. புதிதாக பிரிக்கப் பட்ட தாம்பரம் காவல் ஆணை யரக சிறப்பு அதிகாரியாக ஏடி ஜிபி ரவியும், ஆவடி காவல் ஆணையரக சிறப்பு அதிகாரியாக சந்தீப் ராய் ரத்தோரும் நியமிக் கப்பட்டுள்ளனர். புதிய காவல் ஆணையரக அலுவலகம் கட் டப்படும் வரை தற்காலிகமாக தாம்பரம் மற்றும் ஆவடி காவல் இணை ஆணையர் அலுவலகங் களில் புதிய காவல் ஆணையரகம் செயல்பட்டு வருகிறது. இங்கு தனியாக அலுவலக அறை அமைக்கப்பட்டுள்ளது. இதற் கென அமைச்சுப் பணியாளர்க ளும், காவல் துறை அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை மாநகர காவல் ஆணையரகத்துக்கு கீழ் 137 காவல் நிலையங்கள் இருந்தன. தாம்பரம், ஆவடி என புதிதாக இரண்டு காவல் ஆணையரகம் உருவாக்கப்பட்டுள்ளதால், இந்த ஆணையரகங்களுக்கு கீழ் வரும் காவல் நிலையங்கள் பட்டியலை டிஜிபி அலுவலகம் வெளியிடப்பட்டுள்ளது. அதில், சென்னை மாநகர காவல் ஆணையகரத்தின் கீழ் 104 காவல் நிலையங்களும், தாம்பரம் காவல் ஆணையரகத்தின் கீழ் 20 காவல் நிலையங்களும், ஆவடி காவல் ஆணையரகத்தின் கீழ் 25 காவல் நிலையங்களும் செயல் படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி, சென்னையில் இருந்து 13 காவல் நிலையங்கள், காஞ்சிபுரத்தில் இருந்து 2 காவல் நிலையங்கள், செங்கல்பட்டில் இருந்து 5 காவல் நிலையங்கள் பிரிக்கப்பட்டு மொத்தம் 20 காவல் நிலையங்கள் தாம்பரம் காவல் ஆணையரகத்தின் கீழ் செயல்படும். சென்னையிலிருந்து 20 காவல் நிலையங்கள், திருவள் ளூரில் இருந்து 5 காவல் நிலை யங்கள் பிரிக்கப்பட்டு 25 காவல் நிலையங்கள் ஆவடி காவல் ஆணையரகத்தின் கீழ் செயல் படும்.

தாம்பரம், குரோம்பேட்டை, சேலையூர், சிட்லப்பாக்கம், பீர்க் கன்காரணை, குன்றத்தூர், பல் லாவரம், சங்கர் நகர், பள்ளிக் காரணை, பெரும்பாக்கம், செம் மஞ்சேரி, கண்ணகி நகர், கானத் தூர், சோமங்கலம், மணிமங்கலம், ஓட்டேரி, கூடுவாஞ்சேரி, மறை மலை நகர், தாழம்பூர், கேளம் பாக்கம் ஆகிய 20 காவல் நிலை யங்கள் தாம்பரம் காவல் ஆணை யரகத்தின் கீழ் செயல்படும்.

மாதவரம் மில்க் காலனி, செங்குன்றம், மணலி, சாத்தங் காடு, மணலி புதுநகர், எண்ணூர், மாங்காடு, பூந்தமல்லி, நசரேத் பேட்டை, முத்தபுதுபேட்டை, பட்டாபிராம், அம்பத்தூர், அம் பத்தூர் தொழிற்பேட்டை, கொரட் டூர், திருவேற்காடு, எஸ்ஆர்எம்சி, ஆவடி, ஆவடி டேங்க் தொழிற் சாலை, திருமுல்லைவாயில், திருநின்றவூர், வெள்ளவேடு, செவ்வாய்பேட்டை, சோழவரம், மீஞ்சூர், காட்டூர் ஆகிய 25 காவல் நிலையங்கள் ஆவடி காவல் ஆணையரகத்தின் கீழ் செயல்படும் என்று தமிழ்நாடு  காவல் துறை தெரிவித்துள்ளது. தாம்பரம் காவல் ஆணையரகத் தின் கீழ் 20 காவல் நிலையங்களும், ஆவடி காவல் ஆணையரகத்தின் கீழ் 25 காவல் நிலையங்களும் செயல்படும்

No comments:

Post a Comment