கல்லூரிகளில் தொழில்முறை ஆங்கிலப் பாடம் கட்டாயம்: உயர்கல்வி மன்றம் உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 12, 2021

கல்லூரிகளில் தொழில்முறை ஆங்கிலப் பாடம் கட்டாயம்: உயர்கல்வி மன்றம் உத்தரவு

சென்னை, அக். 12- தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்தின் உறுப்பினர் செயலர் கிருஷ்ணசாமி, அனைத்து பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கும் அனுப் பியுள்ள கடிதம்:

தமிழ்நாட்டில் உயர் கல்வித் துறையின்கீழ் இயங்கும் அனைத்து பல் கலைக்கழகங்கள் மற்றும் அதுசார்ந்த கல்லூரிக ளில் 2020-2021ஆம் கல்வி யாண்டில், இள நிலை பிரிவில் தொழில் முறை ஆங் கில பாடம் அறிமுகம் செய்யப்பட் டது. இந்த பாடம் முதல் மற்றும் 2ஆம் பருவங் களில் பயிலும் மாணவர் களுக்கு மட்டும் கற்பிக்கப் பட்டது. அதைத் தொடர்ந்து நடப்புக் கல்வியாண்டிலும் தொழில்முறை ஆங்கில பாடத்தை முன் னோட்ட மாக அனைத்து பல் கலைக் கழகங்களும் அமல்படுத்த வேண்டும். அடுத்த கல்வியாண்டில் (2022-2023) 3, 4ஆம் பரு வத்தில் தொழில்முறை ஆங்கிலப் பாடம் அமல் படுத்தப்படும். அதற்கான, பாடத்திட்ட வடிவமைப் புகள் குறித்து அனைத்துக் கல்லூரிகளும் கருத்து தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த நடைமுறை அண்ணா பல்கலைக்கழ கம், சட்டப் பல்கலைக் கழகம், தனியார் நிகர் நிலைப் பல்கலைக்கழகங் களுக்கு பொருந்தாது என் பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment