2ஆவது டோஸ் தடுப்பூசிக்கு முக்கியத்துவம் அளிக்க மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 25, 2021

2ஆவது டோஸ் தடுப்பூசிக்கு முக்கியத்துவம் அளிக்க மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தல்

புதுடில்லி, அக்.25 2ஆவது டோஸ் தடுப்பூசிக்கு முக்கியத்துவம் அளிக்க மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தி உள்ளது.

இந்தியாவில் கரோனா தடுப்பூசி பணிகள் ஜெட் வேகத்தில் நடந்து வருகிறது. இதில் அதிகமான பயனாளிகளுக்கு முதல் டோஸ் போடப்பட்டு உள்ள நிலையில், 2ஆவது டோஸ் பெற்றிருப்போரின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. எனவே 2ஆவது டோஸ் பயனாளிகளுக்கு தடுப்பூசி போடுவதில் கவனம் செலுத்துமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தி இருக்கிறது.

இது குறித்து ஒன்றிய சுகாதார அமைச்சகம்

வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் இதுவரை 71.24 கோடி முதல் டோஸ் போடப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் 76 சதவீத பயனாளிகள் பலன் பெற்றுள்ளனர். அதே நேரம் 30.06 கோடி பேர் அதாவது 32 சதவீதம் பேர் 2ஆவது டோஸ் போட்டுள்ளனர். எனவே முதல் டோஸ் போட்டு இடைவெளி காலம் முடிந்த பயனாளிகளுக்கு 2ஆவது டோஸ் போடுவதில் கவனம் செலுத்த வேண்டும் என கூறியுள்ளது.

இது தொடர்பாக மாவட்டம் வாரியாக பயனாளிகளை கணக்கெடுத்து 2ஆவது டோஸ் போட வேண்டிய பயனாளிகளை அடையாளம் கண்டறியலாம் என சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் தெரிவித்து உள்ளார்.


No comments:

Post a Comment