பொறியியல் தரவரிசைப் பட்டியல் வெளியீடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 15, 2021

பொறியியல் தரவரிசைப் பட்டியல் வெளியீடு

சென்னை, செப். 15- பொறியியல் மாணவர் சேர்க் கைக்கான தரவரிசைப் பட்டியல் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது. இதை தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெளியிட் டார். இதில் 13 மாணவர் கள் முழு மதிப்பெண்களு டன் முதலிடம் பிடித்துள் ளனர்.

தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிக ளில் மாணவர் சேர்க் கைக்கான தரவரிசைப் பட்டியல் இணையதளத் தில் இன்று வெளியிடப் பட்டது. முன்னதாகப் பொறியியல் படிப்புகளில் சேர 1,74,930 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். அதில் 1,45,045 மாணவர் கள் விண்ணப்பக் கட்ட ணத்தைச் செலுத்தி இருந் தனர்.

இந்த ஆண்டு 1,39,033 பேரிடம் இருந்து தகு தியான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில், 87291 பேர் மாணவர்கள். 51730 பேர் மாணவிகள். மூன்றாம் பாலினத்தவர் 12 பேர். இவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியாகியுள் ளது. இந்தப் பட்டியலில் 13 மாணவர்கள் 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற்று, முதலிடத்தைப் பெற்றுள்ளனர்.

440 கல்லூரிகள் பங்கேற்பு

தமிழ்நாட்டில் இந்தக் கல்வி ஆண்டில் அரசு, தனியார் கல்லூரிகளில் 440 கல்லூரிகள் மட்டுமே பொறியியல் கலந்தாய் வில்பங்கேற்கின்றன. அதன்படி, 1 லட்சத்து 51 ஆயிரத்து 870 இடங்கள் மட்டுமே கலந்தாய்வுக்குக் கிடைத்துள்ளன. கடந்த ஆண்டில் 461 கல்லூ ரிகளில் 1 லட்சத்து 63 ஆயிரத்து 154 இடங்கள் கலந்தாய்வுக்குக் கிடைத்தன.

இதனால் கடந்த ஆண்டைவிட தற்போது 11,284 இடங்கள் குறைந் துள்ளன. விண்ணப்பித் தவர்களைவிட இடங்கள் எண்ணிக்கையும் குறைவா கவே உள்ளது. இதனால் விண்ணப்பித்த மாணவர் கள் அனைவருக்கும் பொறி யியல் படிப்புக்கான இடம் கிடைப்பது உறுதியாகி உள்ளது.

பொறியியல் கலந்தாய்வு

இதைத் தொடர்ந்து முதல்கட்டமாக, அரசுப் பள்ளி மாணவர்கள், மாற் றுத் திறனாளிகள், விளை யாட்டு வீரர்கள், முன் னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கான சிறப் புப் பிரிவு கலந்தாய்வு செப்.17 முதல் 24ஆம் தேதி வரையும், பொதுப் பிரிவு கலந்தாய்வு செப்.27 முதல் அக்.17ஆம் தேதி வரையும் நடக்க உள்ளன.

மாணவர்கள் தங்களு டைய தரவரிசைப் பட்டி யலைக் காண: https://www.tneaonline.org/என்ற முக வரியைக் காணலாம்.

No comments:

Post a Comment