பாப்பிரெட்டிப்பட்டி மா .அண்ணாதாசன்- அ.மேகலா ஜாதி மறுப்பு இணையேற்பு விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 21, 2021

பாப்பிரெட்டிப்பட்டி மா .அண்ணாதாசன்- அ.மேகலா ஜாதி மறுப்பு இணையேற்பு விழா

தமிழர் தலைவர் காணொலி வழியாக தலைமையேற்று நடத்தி வைத்தார்

பாப்பிரெட்டிப்பட்டி,செப்.21-  தருமபுரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் பாப்பிரெட்டிப்பட்டி மாரி  கருணாநிதியின் தம்பி கண்ணதாசன்-.மேகலாவின் திருமண விழாவை திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் காணொலி வழியாக தலைமை ஏற்று நடத்தி வைத்தார்.

பாப்பிரெட்டிப்பட்டி செங்கல் மாரி- தனபாக்கியம் அவர்களது மகன் மா.அண்ணா தாசன், சேலம் மாவட்டம் சூரமங்கலம் அழகேசன்- லட்சுமி ஆகியோரது மகள் .மேகலா ஆகியோரின் மணவிழா 10-9-2021 வெள்ளிக்கிழமை காலை 10 மணி அளவில் பாப்பிரெட்டிப் பட்டி மல்லிகா பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.                                  நிகழ்ச்சிக்கு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி .வீரமணி அவர்கள் காணொலியாக தலைமை ஏற்று மணமக்களை வாழ்த்திப் பேசினார். மாவட்ட திராவிடர் கழகத் தலைவர்

வீ .சிவாஜி, தருமபுரி மண்டல திராவிடர் கழகத் தலைவர் .தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை ஏற்றனர். திராவிடர் கழக மாநில அமைப்பு செயலாளர் ஊமை.ஜெயராமன் மணமக்களுக்கு உறுதிமொழி கூறி மணவிழாவில் நடத்திவைத்தார்.  எந்த சடங்குமின்றி பகுத்தறிவு திருமணமாக அதே வேளையில் ஜாதி மறுப்புத் திருமணம் நடைபெற காரணமாக இருந்து மண விழா நடைபெற ஒத்துழைப்பு கொடுத்த மணமக்களின் பெற்றோருக்கு ஊமை ஜெயராமன் பயனடை அணிவித்து  வாழ்த்துரை வழங்கினார். மணவிழா உறுதிமொழிப் படிவத்தில் மணமக்கள் இருவரும் கையொப்பமிட்டனர். அதேபோல பெற்றோர் மற்றும் மணவிழாவை நடத்தி வைத்தவர்கள்  கையொப்பமிட்டனர்.

அதைத்தொடர்ந்து மணமக்களை முன்னாள் உயர்கல்வித் துறை அமைச்சர் பெ.பழனியப்பன், முன்னாள் செய்தித்துறை அமைச்சர் . முல்லை வேந்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் இரா.செந்தில், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.                                                                      

நிகழ்ச்சியில் திராவிட முன்னேற்றக் கழக ஒன்றிய செயலாளர் சித்தார்த்தன்,மாவட்ட திராவிடர் கழக  அமைப்பாளர் இரா.சேட்டு, மாவட்ட பகுத்தறிவாளர் எழுத்தாளர் மன்றத் தலைவர் பெரு.முல்லையரசு ,திராவிடர் மாணவர் கழக மாநில  துணை செயலாளர் .யாழ்திலீபன், மாவட்ட மாணவர் கழக தலைவர் .சமரசம், பொதுக்குழு உறுப்பினர் .மாதன், தருமபுரி விடுதலை வாசகர் வட்டத் தலைவர் .சின்னராஜ், மாவட்ட மாணவர் கழகச் செயலாளர் பிரதாப், பாப்பிரெட்டிப்பட்டி பெரியார் மன்ற பொறுப்பாளர் ஆசிரியர்  கு.தங்கராஜ்,மாவட்ட இளைஞரணி செயலாளர் பூபதிராஜ்,தருமபுரி விடுதலை வாசகர் வட்ட செயலாளர் சுதாமணி,தருமபுரி நகர தலைவர் கரு.பாலன், மாவட்ட ஆசிரியர் அணி செயலாளர் கதிர்.செந்தில், மாவட்ட ஆசிரியர் அணி தலைவர்மு. பிரபாகரன், கடத்தூர் விடுதலை வாசகர் வட்டத் தலைவர் தனசேகரன், செயலாளர் நடராஜ், தாளநத்தம்  சொ.பாண்டியன், பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றிய செயலாளர் சின்னதுரை, மக்கள் கட்சியின் மாநில தலைவர் இனமுரசு கோபால்,  அன்பரசன், ராஜவேங்கன், ஓவியர் குப்பன், பாப்பிரெட்டிப்பட்டி  பகுதி தோழர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், ஆசிரியர்கள்  என பெருமளவில்  கலந்து கொண்டு சிறப்பித்தனர்.    வருகை தந்த அனைவருக்கும் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் மாரி.கருணாநிதி இயக்க நூல்களை வழங்கி நன்றி கூறினார்.

No comments:

Post a Comment