விவசாயிகளின் திறனை அங்கீகரிக்கும் விருது - பாராட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 21, 2021

விவசாயிகளின் திறனை அங்கீகரிக்கும் விருது - பாராட்டு

சென்னை, செப். 21- இந்திய விவசாயிகளிடையே நிறைந்துள்ள நேர்மை, உழைப்பு, தன்முயற்சி போன்றவற்றை அங்கீக ரித்து, அதற்கு தலைவணங் கும் விதமாக, சோனா லிகா குழுமம், ‘சோனா லிகா விவசாயி கவுரவ விருது 2021’  என்ற பெய ரில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறந்த விவசாயிகளை ஆண்டுதோறும் தேர்ந் தெடுத்து விருது வழங்க முடிவு செய்துள்ளது.

விருது பெறும் 15 விவ சாயிகளின் போராட்டக் கதைகள், புகைப்படங்கள் நிறைந்த ஒரு புத்தகமா கவும் வெளியிடப்பட உள்ளது. ‘மண் குறித்த கனவுகள், வலுவான ஆசைகள்: இந்திய விவசாயிகளின் கதைஎனப் பெயரிடப்பட்டுள்ள இப் புத்தகம், வெறும் வண்ணப் புத்தகமாக இல்லாமல், வளம் நிறைந்த வெற்றி கரமான இந்திய விவசா யக் கனவுகளையும் சுமந்து வர உள்ளது

இந்தப் புதிய முயற்சி குறித்து தனது கருத்துக ளைப் பகிர்ந்து கொண்ட இந்நிறுவனத்தின் சமூகப் பொறுப்புப் பணிகளுக் கான இயக்குநர் சுர்பி மிட்டல் பேசுகையில், “ஏராளமான சவால்கள் நிறைந்ததாக இருந்தா லும், அவை அனைத்துக் கும் ஈடு கொடுத்து, வலு வாக நிமிர்ந்து நிற்கும் இன்றைக்குள்ள இந்திய விவசாயச் சூழலை வளர்த் தெடுத்ததில் நமது வேளாண் பெருமக்களின் அபரிமிதமான பங்க ளிப்பு பாரட்டுக்குரியது; மறுக்க இயலாதது. மனித இனம் பிழைத்திருக்க தொடர்ந்து பெருமளவு உதவியிருப்பதால், இந்த விவசாயிகளின் பங்களிப் பைப் பாராட்டுகிறோம் எனத் தெரிவித்துள்ளார்..

No comments:

Post a Comment