தலிபான்கள் பதவியேற்பு விழாவில் பங்கேற்கப் போவதில்லை: ரஷ்யா அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, September 12, 2021

தலிபான்கள் பதவியேற்பு விழாவில் பங்கேற்கப் போவதில்லை: ரஷ்யா அறிவிப்பு

மாஸ்கோ, செப். 12- ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளாக நடந்து வந்த போர், கடந்த மாதம் 15-ஆம் தேதி முடிவுக்கு வந்தது. அங்கு எப்போதும் துப்பாக்கியும், கையுமாக அலைகிற தலிபான்கள் ஆட்சி அதிகாரத்துக்கு வந்து உள்ளனர். அங்கு இடைக்கால அரசையும் தலிபான்கள் அமைக்க உள்ளனர்.

ஆட்சி பொறுப்பேற்கும் பிரதமர் உள்ளிட்ட அமைச் சர்கள் விவரங்களை அண்மையில் வெளியிட்டனர்.

இந்நிலையில் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள பாகிஸ்தான், சீனா, ரஷ்யா உள்பட 6 நாடுகளுக்கு தலிபான்கள் அழைப்பு விடுத்து இருந்தனர்.  ஆனால், பதவியேற்பு விழாவில் பங்கேற்கப்போவதில்லை என ரஷ்யா தெரிவித்துள்ளது.

அமெரிக்கப் படைகள் வெளியேறிய பிறகு காபூலில் இருந்து முதல் விமானம்,தோஹா சென்றடைந்தது

தோஹா, செப். 12- 20 ஆண்டுகளாக நடந்து வந்த போருக்கு பின்னர் ஆப்கானிஸ்தானை தலிபான்கள் வசப்படுத்தினர். கடந்த மாதம் 15ஆம் தேதி தலைநகர் காபூல் வீழ்ந்த பின்னர் அங்கிருந்து பல்வேறு நாட்டினரும் பாதுகாப்பாக வெளியேறி சொந்த நாடுகளுக்கு சென்றனர். அமெரிக்கப் படை வீரர்களின் கடைசி விமானம் கடந்த 31-ஆம் தேதி காபூலில் இருந்து புறப்பட்டு சென்றது. தற்போது ஆப் கானிஸ்தான் முற்றிலுமாக தலிபான்கள் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.

அமெரிக்கப் படைகள் அங்கிருந்து வெளியேறிய பின்னர் முதல் வணிக விமானம் காபூலில் இருந்து கத்தார் நாட்டின் தலைநகரான தோஹாவுக்கு புறப்பட்டு சென்றது.

113 பயணிகளுடன் சென்ற அந்த விமானம், அங்கு பத்திரமாக தரை இறங்கியது. அதில் பயணம் செய்தவர்கள் அமெரிக்கா, கனடா மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்தவர்கள் என தகவல்கள் கூறுகின்றன. அவர்கள் அங்கிருந்து தாங்கள் போய்ச்சேர வேண்டிய பிற இடங்களுக்கு புறப் பட்டு சென்றதாகவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக் கின்றன.


No comments:

Post a Comment