ஆப்கானிஸ்தான் இடைக்கால அரசு அமைதி, பாதுகாப்பை உறுதி செய்யும்: பாகிஸ்தான் நம்பிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, September 12, 2021

ஆப்கானிஸ்தான் இடைக்கால அரசு அமைதி, பாதுகாப்பை உறுதி செய்யும்: பாகிஸ்தான் நம்பிக்கை

இஸ்லாமாபாத், செப். 12- ஆப் கானிஸ்தானில் 20 ஆண் டுகளாக நடந்து வந்த போருக்கு பின்னர் அந் நாட்டு அரசை தலீபான் கள் கைப்பாற்றியுள்ளனர். கடந்த மாதம் 15-ஆம் தேதி தலைநகர் காபூல் வீழ்ந்த பின்னர் அங்கி ருந்து பல்வேறு நாட்டி னரும் பாதுகாப்பாக வெளியேறி சொந்த நாடு களுக்கு சென்றனர்.

தற்போது ஆப்கானிஸ் தான் முற்றிலுமாக தலீ பான்கள் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.

மேலும் அங்கு இடைக்கால அரசையும் தலீபான்கள் அமைத்து உள்ளனர். தலிபான்களின் அரசுக்கு சீனா, பாகிஸ் தான் ஆகிய நாடுகள் தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளன.

பாகிஸ்தான் வெளி யுறவு அலுவலக செய்தித் தொடர்பாளர் அசிம் இஃப்திகார் அகமது செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “ஆப்கானிஸ்தானின் அமைதி மீது பாகிஸ்தான் தீவிர அக்கறை கொண் டுள்ளது. தலிபான்கள் தலைமையிலான இடைக் கால அரசு ஆப்கானிஸ் தானில் அமைதி, பாது காப்பு மற்றும் நிலைத் தன்மையை உறுதி செய்வ தோடு, ஆப்கானிஸ்தான் மக்களின் மனிதாபிமான மற்றும் மேம்பாட்டுத் தேவைகளைக் கவனித் துக் கொள்வதற்கான புதிய முயற்சிகள் உறுதி செய்யப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்.

மனிதாபிமான நெருக் கடியைத் தவிர்ப்பதற்காக ஆப்கானிஸ்தான் மக்க ளின் அவசரத் தேவை களை நிவர்த்தி செய்வதில் பன்னாட்டு சமூகம் உரிய பங்கை வகிக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்என்று தெரிவித் துள்ளார்.

No comments:

Post a Comment