மேம்படுத்தப்பட்ட மதுரை புதிய பேருந்து நிலையம், பெரியார் பேருந்து நிலையம் என அழைக்கப்படும் முதலமைச்சருக்கு நன்றி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 14, 2021

மேம்படுத்தப்பட்ட மதுரை புதிய பேருந்து நிலையம், பெரியார் பேருந்து நிலையம் என அழைக்கப்படும் முதலமைச்சருக்கு நன்றி

மதுரை பெரியார் பேருந்து நிலையம், 4 ஆண்டு களுக்கு முன்  முழுவதுமாக இடிக்கப்பட்டு, புதுப்பொலி வுடன், மேம்படுத்தப்பட்ட  வசதிகளோடு கட்டப்பட்டு வருகின்றது.

முத்தமிழ் அறிஞர்   கலைஞர் அவர்கள் 1971-இல் மதுரையை மாநகராட்சியாக ஆக்கினார்கள். மதுரையின் முதல் மேயராக மதுரை எஸ்.முத்து அவர்கள் பொறுப்பேற்றார்மதுரை பேருந்து நிலையத்திற்கு,பெரியார் பேருந்து நிலையம் எனப்பெயர் சூட்டப்படும் என்ற தீர்மானத்தை மதுரை மாநகராட்சி கூட்டத்தில் அனைவரின் ஒத்துழைப்போடு நிறைவேற்றினார்.

மேம்படுத்தப்பட்ட, மதுரை புதிய பேருந்து நிலையம், 'பெரியார் பேருந்து நிலையம் ' என்று எப்போதும் போல அழைக்கப்படும் என 'சமூக நீதிக்கான சரித்திர நாயகர்' தமிழ் நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.. ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலில், மதுரை மாநகராட்சி. 'பெரியார் பேருந்து நிலையம்' என வண்ண வண்ண விளக்குகள் மின்ன, பெயர்ப்பலகையை பொருத்தியிருக் கிறது. இதுகுறித்து மதுரையில் வசிக்கும் திராவிடர் கழகத்தின் மாநில அமைப்புச்செயலாளர் வே.செல்வம், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநிலத்தலைவர் முனைவர். வா.நேரு ஆகியோரிடம் பேட்டி கண்டு சன் தொலைக்காட்சி தனது செய்திகளில் ஒளிபரப்பியது.

இந்தப் பேட்டியில் வே.செல்வம் அவர்கள்கலைஞர் அவர்களால் சூட்டப்பட்ட பெயர் மதுரை பெரியார் பேருந்து நிலையம் என்பது

குறுகிய நாட்களுக்குள்ளேயே அடுக்கடுக்கான சாதனைகளைச் செய்துவரும் இன்றைய தமிழ் நாட்டின் முதலமைச்சர் மாண்புமிகு மு..ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியும் வணக்கமும்' என்று குறிப்பிட்டார். "பாராட்டிப் போற்றி வந்த பழைமை லோகம்,ஈரோட்டுப் பூகம்பத்தால் இடியுது பார்," என்றவர் முத்தமிழறிஞர் கலைஞர்.

அவரது வழியில் பீடு நடைபோடும் ,'சமூக நீதிக்கான சரித்திர நாயகர் ' மாண்புமிகு முதலமைச்சர் மு..ஸ்டாலின் அவர்கள், 'பெரியார் பேருந்து நிலையம்' என்னும் பெயரே மதுரை பேருந்து நிலையத்திற்குத் தொடரும் என்று அறிவித்திருப்பது மிக்க மகிழ்ச்சி தருகிறது.

திராவிடர் கழகம்,பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், மதுரை மக்களின் சார்பாக மனமார்ந்த நன்றியும், வாழ்த்து களும் ' என்று குறிப்பிட்டு பேட்டி அளித்தனர். பேட்டியின்போது மதுரை மாநகர மாவட்ட திராவிடர் கழகத்தின் செயலாளர் கவிஞர் சுப.முருகானந்தம் உடன் இருந்தார்

No comments:

Post a Comment