ரஷ்ய நாடாளுமன்ற தேர்தல் அதிபர் புதின் கட்சி வெற்றி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 21, 2021

ரஷ்ய நாடாளுமன்ற தேர்தல் அதிபர் புதின் கட்சி வெற்றி

மாஸ்கோ, செப். 21- ரஷ்யா 450 இடங்களை கொண்ட நாடாளுமன்றத்துக்கு கடந்த 17-ஆம் தேதி தொடங்கி 3 நாட்கள் தேர்தல் நடந்தது. கரோனா அச்சுறுத்தலுக்கு மத்தி யில் பலத்த முன்னெச்ச ரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் இந்த தேர்தல் நடந்தது.

அதிபர் புதினின் பதவி காலத்தை நீட்டிப்பதற் கான அரசமைப்பு சட் டத்தை மாற்றுவதற்கு புதின் தலைமையிலான ஆளும் அய்க்கிய ரஷ்யா கட்சிக்கு நாடாளுமன் றத்தில் 3-ல் 2 பங்கு பெரும் பான்மை அவசியம் என் பதால் இந்த தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக கரு தப்பட்டது.

அதோடு அந்த நாட் டின் முக்கிய எதிர்க்கட்சி தலைவரான அலெக்சி நவால்னியை கைது செய்து சிறையில் அடைத் தது, அவரது கட்சி உள் பட பல எதிர்க்கட்சிகளை தேர்தலில் போட்டியிடு வதற்கு தடை விதித்தது போன்ற சர்ச்சைகளுக்கு மத்தியில் இந்த தேர்தல் நடந்தது. இந்தநிலையில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றதும் உடனடியாக வாக்குகளை எண்ணும் பணிகள் தொடங்கின. அதன்படி இந்த தேர்த லில் அதிபர் புதினின் கட்சி அமோக வெற்றி பெற்றது. இதுவரை எண் ணப்பட்ட 80 சதவீத வாக் குகளில் அய்க்கிய ரஷ்யா கட்சி 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றதாக அந்த நாட்டு தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

அதோடு மொத்தம் உள்ள 450 இடங்களில் 350-க்கும் அதிகமான இடங்களில் தங்கள் கட்சி வெற்றிப்பெற்றதாக அய்க்கிய ரஷ்யா கட்சி யின் மூதத அதிகாரி ஒரு வர் தெரிவித்தார். இதற் கிடையில் வாக்குப்பதி வில் பல்வேறு முறைகேடு கள் நடைபெற்றதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. ஆனால் தேர்தல் ஆணையம் இந்த குற்றச்சாட்டை நிராகரித் துள்ளது.

No comments:

Post a Comment