துபாய்-ஜெய்ப்பூர் இடையே விமானப் போக்குவரத்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 21, 2021

துபாய்-ஜெய்ப்பூர் இடையே விமானப் போக்குவரத்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தகவல்

துபாய், செப். 21- ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் வெளி யிட்டுள்ள தகவலில் கூறியிருப்பதாவது:-

துபாயில் இருந்து ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூருக்கு இயக்கப்பட்டு வந்த விமான போக்குவரத்து கரோனா பாதிப்பு காரணமாக பாதிக்கப்பட்டது. தற்போது கரோனா பாதிப்பு கட்டுப்பட்டு வருவதால், ஜெய்ப்பூருக்கு மீண்டும் விமான போக்குவரத்து இயக்கப்படும் என தெரி விக்கப்பட்டது. எனினும் ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் கரோனா பரிசோதனை செய்யும் வசதிகள் ஏற்படுத்தப்படா ததால் இந்த விமான போக்குவரத்து இயக்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

தற்போது ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் கரோனா பரிசோதனை வசதிகள் செய்யப்பட்டுள்ளதால் விரைவில் இந்த விமான போக்குவரத்து தொடங்கப்படும். அமீரகத் துக்கு இந்தியாவில் இருந்து வருவதற்கான கட்டுப்பாடுகள் விலக்கி கொள்ளப்பட்டதால், பயணிகள் அதிகமாக வருகின்றனர்.

அமீரகத்தில் தற்போது அய்.பி.எல். கிரிக்கெட் போட்டி நடந்து வருவதாலும், விரைவில் எக்ஸ்போ 2020 உலக கண்காட்சி தொடங்க இருப்பதாலும் இந்தியாவில் இருந்து வருபவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் துபாய், சார்ஜா, அபுதாபி உள்ளிட்ட பகுதிகளுக்கான விமான போக்குவரத்து தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.

ஏமனில் வான்வழி தாக்குதல்ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 30 பேர் பலி

சனா, செப். 21- ஏமன் நாட்டில் மரீப் மத்திய மாகாணத்தில் மேற்கு சிர்வா மாவட்டத்தில் சவுதி தலைமையிலான படையினர் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதில், 13 வாகனங்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளன.  ஹவுதி கிளர்ச்சியாளர்களை இலக்காக கொண்டு நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.

இதுபற்றி ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்தி வரும் அல்-மசீரா தொலைக்காட்சி வெளியிட்டுள்ள செய்தியில், சிர்வாவில் 23 முறை சவுதி தலைமையிலான படையினர் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளனர் என தெரிவித்து உள்ளது.  எனினும், வேறு விவரங்கள் எதனையும் வெளியிடவில்லை.

No comments:

Post a Comment