ஏட்டுத் திக்குகளிலிருந்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 21, 2021

ஏட்டுத் திக்குகளிலிருந்து

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

·  பிள்ளையார் சிலை கரைப்பு காரணமாக அய்தராபாத் நகரில் மட்டும் பத்தாயிரம் மெட்ரிக் டன் குப்பைகள் சேர்ந்துள்ளன.

· சோவியத் ரஷ்யாவில் நடைபெற்ற தேர்தலில் விலாதிமிர் புடின் தலைமையிலான ஆளும் கட்சி அதிக இடங்களை மோசடி செய்து பெற்றுள்ளது என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு.

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

· “சூப்பர் ஸ்பெஷாலிட்டிமருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வில் பாடத்திட்டம் கடைசி நிமிடத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டது தொடர்பாக பதிலளிக்க ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் தாக்கீது பிறப்பித்துள்ளது.

· 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீட்டில் தொழிற்கல்வி படிப்பில் சேரும் அரசு பள்ளி மாணவர்களின் கல்வி, விடுதி கட்டணத்தை அரசு ஏற்கும்: முதலமைச்சர் மு..ஸ்டாலின் அறிவிப்பு

டைம்ஸ் ஆப் இந்தியா:

· நீட் தேர்வால் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து .கே.ராஜன் குழு அளித்த அறிக்கையை தமிழ்நாடு அரசு வெளியிட்டது. தமிழ்நாட்டில் நீட் தேர்வால் தொடர்ந்து நடந்தால், சுகாதார கட்டமைப்பு, கல்வி பாதிக்கப்படும். ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதுமான மருத்துவர்கள் இருக்க மாட்டார்கள்.

· அரசு மருத்துவமனைகளில் போதுமான மருத்துவர்கள் இருக்கமாட்டார்கள். பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில் நீட் தேர்வு மட்டுமல்ல எந்தவித பொது நுழைவு தேர்வும் நியாயமானதாக இருக்காது என்று நீதியரசர் .கே.ராஜன் குழு அளித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

 - குடந்தை கருணா

No comments:

Post a Comment