தோண்டினால் கடவுளர் சிலைகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, September 27, 2021

தோண்டினால் கடவுளர் சிலைகள்

நாகப்பட்டினம்,செப்.27- தேவூர் தேவபுரீஸ்வரர் கோயிலில் நேற்று (26.9.2021) திருப்பணிக்காக நிலத்தை தோண்டிய போது, அய்ம்பொன்னால் ஆன 14 கடவுளர் சிலைகள் மற்றும் வழிபாட்டுப் பொருட்கள் கண்டெடுக் கப்பட்டன.

நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த தேவூரில் அமைந்துள்ளது தேவபுரீஸ்வரர் கோயில். குலோத்துங்க சோழர் கால கோயிலான இங்கு திருப்பணிக்காக புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், கோயிலில் உள்ள நவக்கிரக பீடத்தின் அருகே கான்கிரீட் அமைக்கும் பணிக்காக  நிலத்தை தோண்டியபோது, அங்கு அய்ம்பொன் னாலான சில கடவுளர் சிலைகள் அடுத்தடுத்து கண்டெடுக்கப்பட்டன.

இதுகுறித்து பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில், கீழ்வேளூர் வட்டாட் சியர் மாரிமுத்து, காவல் உதவி ஆய் வாளர் அசோக்குமார் ஆகியோர் அங்கு சென்று, சிலைகளை பார்வையிட்டனர்.

பின்னர், காவல்துறை பாதுகாப்புடன் அந்த இடத்தில் தொடர்ந்து தோண்டியபோது, அங்கு மேலும் சில அய்ம்பொன் சிலைகள் மற்றும் வழிபாட்டுப் பொருட்கள் கிடைத்தன.

இதில், 2 அடியில் இருந்து 4 அடி வரை உள்ள அய்ம்பொன்னால் ஆன 13 கடவுள் சிலைகள், திருவாச்சியுடன் அமைந்துள்ள பிரதோஷ நாயனார் சிலை மற்றும் சங்கு, சூலம், மணி உள்ளிட்ட 19 வழிபாட்டுப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.

தோண்ட, தோண்ட அந்த இடத்தில் கடவுளர் சிலைகள், வழிபாட்டுப் பொருட்கள் கிடைத்ததால், அங்கு பொக்லைன் உதவியுடன் தொடர்ந்து தோண்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.


No comments:

Post a Comment