மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கரோனா நோயாளிகளை கண்காணிக்கும் பயோ சென்சார் கருவிகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, September 27, 2021

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கரோனா நோயாளிகளை கண்காணிக்கும் பயோ சென்சார் கருவிகள்

மதுரை, செப்.27 மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இந்தியா விலே முதல் முறையாக அமெரிக்க தொழில் நுட்பத்தில் தயாரான கரோனா நோயாளிகளை கண்காணிக் கும் அதி நவீன வயர்லெஸ் பயோ சென் சார் கருவியை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்  25.9.2021 அன்று தொடங்கி வைத்தார்.

கரோனா போன்ற தொற்றுநோய் பேரிடர் காலத்தில் நோயாளிகளை மருத்துவக்குழுவினர் அடிக்கடி அருகே சென்று கண்காணிக்க இயலாது. அதனால், கடந்த இரண்டு கரோனா தொற்று காலத்திலும் மருத்துவக்குழுவினர் பெரும் சிரமத்தை அனுபவித்தனர். அதில், அவர்களில் பலர் தொற்று பாதிப்புக்கு ஆளாகினர்.

சிலர் இறக்கவும் செய்தனர். இதுபோன்று தொற்று நோய்களுக்கு உயிர் பலி ஏற்படுவதை தவிர்க்கவும், தொற்று நோயாளிகளுக்கு தொடர்ச் சியான கண்காணிப்பில் சிகிச்சை வழங் கவும் இந்தியாவில் முதல் முறையாக மதுரை
அரசு
இராஜாஜி தலைமை மருத்துவமனையில் அமெரிக்க தொழில் நுட்பத்தில் கரோனா நோயாளிகளின் உடல்நிலை கண்டறியும் அதி நவீன வயர்லெஸ் பயோ சென்சார் கருவி தொடக்க விழா  25.9.2021 அன்று நடந் தது. நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன், கலந்து கொண்டு இந்த கருவியை அறிமுகப்படுத்தி தொடங்கி வைத்தார். டீன் ரெத்தினவேலு தலைமை வகித்து பேசினார்.

அவர் பேசுகையில், தீவிர சிகிச்சைப் பிரிவு போன்ற அவசர சிகிச்சை வார்டு களில் 15 கரோனா நோயாளிகளை இந்த கருவிகளை கொண்டு ஒருவரே கண்காணிக்கலாம். இந்த கருவிகள் பேட்ஜ் மாதிரி இருக்கும். நோயாளியின் நெஞ்சுப் பகுதியில் ஒட்ட வேண்டும். ப்ளூடூத் டிவெஸ் வைத்து இன்டர்நெட் மூலம் நோயாளிகளை கண்காணித்து சிகிச்சை வழங்கலாம்,  என்றார்.

அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், கரோனா போன்ற பேரிடர் காலத்தில் அதிகமான நோயாளிகளை குறைவான பணியா ளர்களை கொண்டு கண்காணிப்பது சிரமம். இதுபோன்ற தொழில் நுட் பங்கள் தொற்று நோய் காலத்தில் அவசியமானது,  என்றார்.

No comments:

Post a Comment