4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள மரபணு பகுப்பாய்வுக் கூடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்து, 91 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 14, 2021

4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள மரபணு பகுப்பாய்வுக் கூடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்து, 91 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்

சென்னை,செப்.14- தமிழ்நாடு முதலமைச்சர்  மு.. ஸ்டாலின் இன்று (14.9.2021) சென்னை, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கக வளா கத்தில் உள்ள பொது சுகா தாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருத்துவத்துறை ஆய்வகத்தில்

4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள மரபணு பகுப்பாய்வுக் கூடத்தை திறந்து வைத்தார். 

மேலும், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரி யத்தின் வாயிலாக திறன் மிகு உதவி யாளர் நிலை-II (Skilled Assistant Grade-II)  பணியிடத் திற்கு தேர்வு செய் யப்பட்டுள்ள 9 நபர்களுக்கும், கருணை அடிப்படையில் இளநிலை உதவி யாளர் பணியிடத்திற்கு 82 வாரிசு தாரர்களுக்கும் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

சட்டமன்றப் பேரவையில் 2.8.2021 அன்று நடைபெற்ற மருத்துவம் மற்றும் மக்கள் நல் வாழ்வுத்துறைக்கான மானியக் கோரிக்கையின்போது  மரபணு பகுப்பாய்வு கூடம் (Whole GenomeSequencing)  ரூபாய் 4 கோடி செலவில் சென்னை, டி.எம்.எஸ். வளாக பொதுசுகாதார ஆய்வகத்தில் நிறுவப்படும்என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.  இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக, டி.எம்.எஸ். வளாகத் தில் உள்ள பொது சுகாதார ஆய்வகத்தில் 4 கோடிரூபாய் மதிப்பீட்டில்  நிறுவப்பட்டுள்ள மரபணு பகுப்பாய்வுக் கூடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்துவைத்தார். 

இந்த நிகழ்ச்சியில், மருத் துவம் மற்றும் மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நாடாளு மன்ற உறுப்பினர்கள் தயாநிதிமாறன், கலாநிதிவீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர்ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சிறப்புபணி அலுவலர் முனைவர் பி.செந்தில்குமார், தேசியநலவாழ்வு குழுமத்தின் திட்டஇயக்குநர் டாக்டர் தாரேஸ்அகமது, இந்திய மருத்துவம் மற்றும் ஓமி யோபதி இயக்குநர் எஸ்.கணே சன், பொதுசுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்து இயக் குநர் டாக்டர் டி.எஸ்.செல்வ விநாயம், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் டாக்டர் எஸ்.குருநாதன், மருத் துவக்கல்வி இயக்குநர் டாக்டர் ஆர்.நாராயணபாபு,  தமிழ்நாடு மாநிலசுகாதார போக்குவரத்துத் துறை இயக் குநர் எஸ்.நடராஜன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment