கல்வியை பொதுப் பட்டியலுக்கு மாற்றியது தொடர்பான வழக்கு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 14, 2021

கல்வியை பொதுப் பட்டியலுக்கு மாற்றியது தொடர்பான வழக்கு

ஒன்றிய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

 சென்னை  செப் 14 கல்வியை மாநில பட்டி யலில் இருந்து பொதுப் பட்டியலுக்கு மாற்றியது அரசமைப்பு சட்டத்திற்கு எதிரான விதிமீறல் என்று கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

 இந்தியாவில் 1975 முதல் 1977 வரையிலான எமர்ஜென்சி காலத்தில் பல்வேறு சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. பல்வேறு விதிமீறல்களும் இந்த கால கட்டத்தில் தான் மேற்கொள்ளப்பட் டது. முக்கியமாக மாநில அரசுகளின் அதிகாரம் பறிக்கப்பட்டு ஒன்றிய அரசுக்கு அதிகாரங்கள் பகிரப்பட்டது. மாநில அரசின் சில அதிகாரங்கள் பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டது. 1976இல் மொத்தம் 5 முக்கியமான துறைகள் பொதுப்பட்டி யலுக்கு மாற்றப்பட்டது. காடுகள் நிர்வாகம், கல்வி, எடை மற்றும் அளவிடல், விலங்குகள் மற்றும் பறவைகள் பாதுகாப்பு, நீதி நிர்வாகம் ஆகியவை மாநில கட்டுப்பாட்டில் இருந்து பொது பட்டிய லுக்கு மாற்றப்பட்டது.

மாநில அரசுகளின் அனுமதி இன்றி, முறை யான சட்ட விதிகளை பின்பற்றாமல் எமர் ஜென்சி காலத்தில் சட் டம் இயற்றப்பட்டது கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது. இப்படி கல்வி பொதுப்பட்டிய லுக்கு மாற்றப்பட்ட காரணத்தாலேயே தற் போது நீட் தேர்வுகள், புதிய தேசிய கல்விக் கொள்கை போன்ற சட் டங்கள் ஒன்றிய அரசு மூலம் அமலுக்கு வந்துள் ளன. இந்த நிலையில்தான் 45 வருடங்களுக்கு முன் கொண்டு வரப்பட்ட இந்த மாற்றத்திற்கு எதி ராக தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட் டுள்ளது. ஆயிரம் விளக்கு தொகுதி திமுக சட்டப் பேரவை உறுப்பினர் டாக்டர் எழிலன் சார் பாக அறம் செய்ய விரும்பு என்ற தொண்டு நிறுவ னத்தின் மூலமாக இந்த மனு  சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

இந்த அமைப்பில் முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதிகள் சிடி செல்வன், அக்பர் அலி, மூத்த பத்திரிக்கையாளர் .எஸ். பன்னீர்செல்வம் உள் ளிட்ட பலர்  உறுப்பினர் களாக உள்ளனர். கல் வியை மாநில பட்டியலில் இருந்து பொதுப்பட்டிய லுக்கு மாற்றியது அரச மைப்பு சட்டத்திற்கு எதி ரான விதிமீறல், அரச மைப்பு விதிகளுக்கு எதி ராக, வரம்பு மீறி இந்த மாற்றம் செய்யப்பட் டுள்ளதாக பிரகடனம் செய்ய வேண்டும்  என்று கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

 பிரபல கேசவாநந்த பாரதி வழக்கை சுட்டிக் காட்டி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 24 ஏப்ரல் 1973 அன்று உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சிக்ரி உள்ளடக்கிய 13 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு கேசவாநந்த பாரதி வழக் கில் தீர்ப்பு வழங்கியது. அதில், நாடாளுமன்றத் தில் இருக்கும் அனைத்து உறுப்பினர்களும் சேர்ந்து முயன்றாலும், வாக்களித் தாலும் கூட அரசமைப்புச் சட்டங்களை ஒரு குறிப் பிட்ட அளவிற்கு மேல் மாற்றம் செய்ய முடியாது என்று இந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது. இதை சுட்டிக் காட்டி கல்வியை பொதுப் பட்டியலுக்கு மாற்றிய தற்கு எதிர்ப்பு தெரிவித்து மனு தாக்கல் செய்யப் பட்டுள்ளது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி முன் விசாரணைக்கு வந் தது, அப்போது நீதிபதி கூறியதாவது, மாநில அரசு முழு உரிமைகளைப் பெற்றால் மட்டுமே கல்வி மாநிலப் பட்டியலுக்கு வருவது சாத்தியம் என்று கூறிய அவர் இது தொடர்பாக ஒன்றிய அரசுக்கும் மாநில அர சுக்கு 8 வாரங்களில் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

No comments:

Post a Comment