கடலில் ஏற்படும் எண்ணெய்க்கப்பல் விபத்துகளுக்கு யார் பொறுப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 14, 2021

கடலில் ஏற்படும் எண்ணெய்க்கப்பல் விபத்துகளுக்கு யார் பொறுப்பு

நாம் தற்போது அடிக்கடி கேட்கும் செய்தி கச்சா எண்ணெய் ஏற்றிக்கொண்டு சென்ற கப்பல் விபத்து ஏற்பட்டு  டன் கணக்கில் கச்சா எண்ணெய் கடலில் கலந்து சுற்றுச் சூழல் பாதிப்பு மற்றும் கடல்வாழ் உயிரினம் மடிவதை பார்க்கிறோம். சென்னையில் கூட வாளியில் கச்சாஎண்ணெயை அள்ளி அகற்றிக் கொண்டு இருந்தனர்.

கப்பல் விபத்து ஏற்பட்டோ, தீப்பிடித்தோ அல்லது மூழ்கி விடும் போதோ பெரிய அளவில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. ஆனால் அதானால் ஏற்படும் கடல் மாசுபாட் டிற்கு யார் பொறுப்பு என்ற கேள்வி எழும்பியுள்ளது.

கப்பல் பதிவுசெய்யப்படும் இடம் பல அம்சங்களைக் கருத்தில் கொண்டு எடுக்கப்படும் முடிவு.

பொதுவாகக் கப்பல் விபத்துச் சம்பங்களுக்கு பதிவு செய்யப்பட்ட இடம் பொறுப்பேற்கவேண்டும் என்ப தில்லை.

அனைத்துலக வர்த்தகத்தில் ஈடுபடும் கப்பல்கள் கட்டாயம் ஒரு நாட்டில் பதிவு செய்திருக்க வேண்டும். அது அனைத்துலகச் சட்டப்படிக் கட்டாயம்.

கப்பல் அந்த நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்ப டவேண்டும்.

கப்பல் பதிவு செய்யப்பட்ட நாட்டின் பொறுப்பு கப்பலின் தரம் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்வது.

கப்பல் கட்டப்பட்டவிதம், கப்பல் கடல் பயணத்திற்குப் பாதுகாப்பானதா, உகந்ததா போன்ற முக்கிய அம்சங்களைக் கப்பலைப் பதிவு செய்யும் நாடு ஆராயும். கப்பலால் கடலின் சுற்றுப்புறத்திற்குத் தீங்கு ஏற்பட்டால், அது குறித்தும் நாடு விசாரிக்கும்.

கப்பலைப் பதிவு செய்யும் போது கருத்தில் கொள்ளப்படும் சில முக்கிய அம்சங்கள்:

--வரிச் சலுகைகள்

--நாட்டின் நற்பெயர், தரமான சோதனைகள்

சிங்கப்பூர், ஹாங்காங், பனாமா போன்ற பகுதிகளில் பதிவு செய்யப்பட்ட கப்பல்கள் மீது அதிக நம்பிக்கை இருக்கும்.

சிங்கப்பூர் பதிவில் மட்டும் 4,400-க்கும் மேற்பட்ட கப்பல்கள் உள்ளன.

உலகில் அதிக கப்பல் பதிவுகளைக் கொண்ட நாடுகளில் சிங்கப்பூர் 5ஆவது இடத்தில் உள்ளது.

விபத்துகளுக்கு யார் பொறுப்பு?

சேதங்களுக்குப் பொதுவாகப் பதிவு செய்யப்பட்ட நாடு பொறுப்பல்ல.

சம்பவம் ஏற்படும் துறைமுகமும் பெரும்பாலான நேரங்களில் பொறுப்பல்ல.

கப்பலில் உள்ள சரக்குகளின் சேதத்திற்கும் கடலில் ஏற்பட்ட சுற்றுப்புறப் பிரச்சினைகளுக்கும் கடலோடிகள், கப்பலின் உரிமையாளர்களே பெரும்பாலும் பொறுப் பேற்கவேண்டும்.

சேதங்களுக்கான இழப்பீட்டை காப்பீட்டு நிறுவனங் கள் வழங்கவேண்டும்.

இருப்பினும் சம்பவத்திற்கான காரணங்கள் விசாரிக் கப்பட்டு,பின் யார் பொறுப்பு என்று அறிவிக்கப்படும்.

பொதுவாக கச்சா எண்ணெய் எடுத்துச்செல்லும் போது நடக்கும் விபத்திற்கு தொடர்புடைய நிறுவனம் பொறுப்பேற்கவேண்டும். ஆனால் இந்த விவகாரத்தில் பெரிய எண்ணெய் நிறுவனங்கள் ஏதோ பிச்சை போடுவதுபோல் நிதி அல்லது இழப்பீடு கொடுத்துவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கச்சென்றுவிடுகின்றனர். ஆனால் அதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசு நீங்க ஆண்டுகள் பல ஆகிவிடுகிறது.

2008 ஆம் ஆண்டில் ஏற்பட்ட அமெரிக்க வளை குடாப்பகுதி எரிஎண்ணெய் விபத்தால் கடுமையான பாதிப்பிற்குள்ளான மியாமி வளைகுடாப்பகுதியில் இன் றளவும் அப்பகுதியில் வாழும் உயிரினங்களின் உடலில் நச்சுத்தன்மை கொண்ட வேதிப்பொருள் கலந்துள்ளதால் குறிப்பிட்ட பகுதியில் மீன் பிடிக்க 10 ஆண்டுகளுக்கும் மேல் தடை தொடர்கிறது.

ஆனால் விபத்தோடு தொடர்புடைய எரி எண்ணெய் நிறுவனம் அப்பகுதியிலேயே மேலும் 8 புதிய ஆழ்கடல் எரிஎண்ணெய் கிணறுகளை அமைத்துவிட்டது.

No comments:

Post a Comment